ஞாயிறு, 27 டிசம்பர், 2009

வரவிருக்கும் விஜய் படங்களின் கதை சுருக்கம்

இன்று எதோ என் கேட்ட நேரம் ..."வேட்டைக்காரன்" பார்க்க நேர்ந்தது..

சிவகாசியில் - 1000 ஆட்களை அடிக்க ஆரம்பித்து.
திருப்பாச்சியில் - 1000 ஆட்களை அடித்து
போக்கிரி - 1000 ஆட்களை அடித்து
குருவியில் - 1000 ஆட்களை அடித்து..
வில்லுவில் - 1000 ஆட்களை அடித்து..
வேட்டைக்காரனிலும் 1000 ஆட்களை அடித்து நொறுக்குகிறார்..விஜய்
டாக்டர்.இளைய தளபதி விஜய்க்கு ஏன் இந்த கொலை வெறி .. என்று தெரியவில்லை..??

படத்திற்கு படம் இதையே எப்படி அவரால் செய்ய முடிகிறது என்றும் புரியவில்லை..
மத்த ஆக்ஷன் கதாநாயகர்களும் இதே போன்று செய்தாலும் ..ஓரிரு படங்களிலாவது வித்தியாசமாக செய்ய நினைக்கிறார்கள்..
ஆனால் தன் முடியிலிருந்து தான் அணியும் ஜீன்ஸ் வரை எதையும் மாற்றிக்கொள்ளாமல் படத்திற்கு படம் ரிஸ்க் எடுக்கும் நம் தளபதியின் சாமர்த்தியமே சாமர்த்தியம்!!

இவர் இதுவரை நடித்த படங்களை வைத்து , இவரது இனி வரும் படங்களின் கதையை உருவாக்கும் முயற்சியே இந்த பதிவு..

காட்சி-1:
சென்னை..
நேர்மையான போலிஸ் அதிகாரி / நேர்மையான அரசியல்வாதி / நியாயமான வியாபாரி / சேரியில் வாழும் ஏழை மக்கள் - இவர்களில் ஒருவரை சித்ரவதை செய்து / பின் கொலை செய்யும் ரெளடி..
இந்த ரெளடிக்கு படு பயங்கரமாக கத்த தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ..
போலீஸ் / மிலிட்டரி / முதலமைச்சர் என்று எல்லோரும் இந்த ரெளடியின்(வில்லன் 1) காண்டாக்ட் லிஸ்டில்....
இந்த ரெளடியின் பெயர் படு பயங்கரமாக இருக்க வேண்டும் - "சனியன்" சகட, "பட்டாசு" பாலு,"வெல்டிங்" குமார்.. போன்று
இவன் டாட்டா சுமோவிலோ. அல்லது மஹிந்தரா போலேரோவிலோ வந்து போவது மிகவும் அவசியம்..
கட்

காட்சி - 2:
தூத்துக்குடி / மதுரை/ திருநெல்வேலி / சிவகாசி / திருப்பாச்சி - இதில் எதோ ஒரு ஊரில் - அட்டகாசம் செய்யும் சிறு லோக்கல் ரெளடிகள் - கடைக்காரர்களிடம் வசூல் செய்பவர்கள் / பெண்களை கிண்டல் செய்பவர்கள் / கந்து வட்டிகாரர்கள் / குடிகாரர்கள் - இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..நம் தளபதியின் நண்பர் ஒருவர் (இவர் காமெடியானாக இருப்பது அவசியம்) வந்து திரும்பியிருக்கும் தளபதியிடம் சொல்ல...

தளபதி ஓபனிங் ஸ்டைல் (தன் கைகளாலேயோ/ துண்டு/ கர்ச்சிப்பு / சிகிரெட் வைத்து செய்யலாம்)
முடிந்ததும் ... கால்களிலிருந்து .. மெல்ல நகர்ந்து கமெரா தளபதி குழந்தை சிரிப்பில் முடிக்க வேண்டும்...
பின் ..சிறு ரெளடிகளை துவம்சம் செய்வார் தளபதி..
பின் ஒரு பஞ்ச் டயலாக்..
(ஓபனிங் ஸ்டைலும் , பஞ்ச் டயலாக்கும் - எப்போதெல்லாம் தளபதி புத்துணர்ச்சி பெறுகிறாரோ அப்போதெல்லாம் வைக்கவேண்டியது அவசியம்)
பின் ஓபனிங் பாடல்..இதில் சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்ல வேண்டியது அவசியம் (பாடல் - 1)
(படம் முழுக்க தளபதிக்கு - லேவிஸ் ஜீன்ஸ் , விராங்கலர் டி-ஷர்ட், மற்றும் நைக்கி ஷூவும் தான் காஸ்டியூம் - அவர் எந்த ஊரில் இருந்தாலும் / எப்படிபட்ட குடும்பத்தில் பிறந்தாலும் இது மாற்றப்பட மாட்டாது)

காட்சி - 3:
எதுவும் தெரியாத பூனை மாதிரி தளபதி தன் வீட்டிற்குள் வந்து நல்ல பிள்ளை போல் இருக்க..
தளபதி குடும்பம் அறிமுகம்..
அப்பா - தளபதியை உருப்படாதவன் என்று திட்டுபவர்..
அம்மா - ஒரு ஏமாந்த சோனகிரி - தன் பிள்ளை தங்கம் என்று கருதும் வெகுளி..
தங்கை - காலேஜ் / பள்ளி படிக்கும் தங்கை ,
(அப்பா/அம்மா இல்லையென்றால் - காலேஜ் படிக்கும் தங்கை / தம்பி இருப்பது அவசியம்)
நண்பர்கள் - இரண்டு காமெடியன்கள் / இரண்டு மூன்று ஸ்டண்ட் மேன்கள்..
இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையை எடுத்துச்சொல்லும் ஒரு பாடல்..(பாடல் - 2 - குத்து பாடலாக இருப்பது அவசியம் - இது ஒரு ஐடம் பாடலாகவும் இருக்கலாம்)
பின் எதோ காரணங்களினால் - சென்னைக்கு ரயில் ஏறும் தளபதி

காட்சி - 4:
கதாநாயகி அறிமுகம்..மற்றும் கவுத்தல்.
சென்னைக்கு வரும் ரயிலிலோ / அல்லது தங்க வந்த உறவினர் வீட்டினருகிலோ - கதாநாயகி இருக்க வேண்டியது அவசியம்.. ஒவ்வொரு நொடியும் நமக்கு முக்கியம்
நண்பர்கள் - சென்னையில் புது காமெடியன்களையும் உபயோகித்துக்கொள்ளலாம் / அல்ல ஊரிலிருந்து தளபதியுடனே காமெடியனும் வரலாம்.. (இது பட்ஜெட் பொறுத்து பார்த்துக்கொள்ளப்படும்)
தளபதி - காமெடி நண்பர்கள் - கதாநாயகி - வைத்து இரண்டு அல்லது மூன்று காட்சிகள் அமைக்க வேண்டும்.
இந்த காட்சி முடிவடையும் போது தளபதி - கதாநாயகி - ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் (பாடல் -3 , பாடல் - 4) முடித்திருக்க வேண்டும் - தங்கள் காதலை சொல்லியிருக்க வேண்டும்..

காட்சி - 5:
சிக்கலில் கதாநாயகி / உறவினர் / நண்பர்கள்
இப்படி இன்பமாக இருக்கும் நம் தளபதிக்கு சென்னையின் உண்மை முகத்தை காட்டும் வில்லன் -2 ..
வில்லன் -2 ( வில்லன் -1ன் நெருங்கிய சொந்தக்காரன்- வில்லன் 1 போன்றே தோற்றம் கொண்டவர் - இதுவரை சரியான வில்லன் வாய்ப்பு கிடைக்காததால் - வில்லன் 2 ஏற்று நடிப்பவர்)
வில்லன் - 2 - பெண் ஆசையால் கதாநாயகியையோ / உறவினன் மனைவியோ / நண்பன் தாய் / தங்கையையோ - கைவைக்க..
அங்கு நம் தளபதி அவனை கொத்து புரோட்டா செய்கிறார்..
இதில் பெரிதும் கோபம் அடையும் வில்லன்-2 தளபதியை பார்த்துக்கொள்வதாக சொல்லி காரை ரிவர்ஸில் ஓட்டி செல்கிறான்..
பாடல் - 5 - வெற்றி பாடல் - தளபதியை மக்கள் வாழ்த்தி பாடும் பாடல் - இதில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற "பஞ்ச்" மக்கள் சொல்வதாக இருக்க வேண்டும.

காட்சி - 6:
வில்லன் - 2 நடந்ததை வில்லன் - 1யிடம் சொல்ல..
வில்லன் -1 , தனது பண பலம் , செல்வாக்கு பயன்படுத்தி போலீஸ் அதிகாரியை (வில்லன் - 3) தளபதி பக்கம் திருப்பிவிடுகிறார்..
பின் போலீஸ் அதிகாரி தளபதியை ரவுண்டு கட்டுகிறார்..
ஆனால் போலீஸ் அதிகாரி பிடியில் இருந்து எப்படி கதாநாயகி / நண்பர்கள் / உறவினர்கள் ஆகியோரை தளபதி தன் அறிவு/கராத்தே கொண்டு காப்பாற்றுகிறார் என்பதை பெரும் பொருட்செலவில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் படமாக்கலாம்..
பின் போலீஸ் அதிகாரி "அவன் சாதாரண ஆள் இல்ல... அவன் வீரன் / சூரன் / நல்லவன்" என்று வில்லன் -1யிடமிருந்து ஜகா வாங்குகிறார்..
இதை பார்த்து கோதிக்கும் வில்லன் -1 ,வில்லன் - 2 வைத்து தளபதிக்கு உயிருக்கு உயிராக இருக்கும் ஒருவரை (தாய் / தங்கை / கதாநாயகி / நண்பர்கள்) கடத்துகிறார்..பின் செல்பேசியில் சவால் விடுகிறார்..
மறுபுறம் தளபதி
"பஞ்ச் - 2 , பஞ்ச் - 3, பஞ்ச் -4" சொல்கிறார்...பின் செல்பேசியை புது யுக்தி கொண்டு சுவிச் ஆஃப் செய்கிறார்..

இடைவேளை

காட்சி - 7:
ஏர்டெல் போன் நெட்வர்க் மற்றும் தன் நண்பர்கள் நெட்வர்க் உதவியுடன்
வில்லன் -2ஐ எப்படியோ பணையக்கைதியாக்கி .. தனக்கு உயிருக்கு உயிரானவரை மீட்டுக்கொள்கிறார்..
ஆனால் தன் கோபத்தால் வில்லன் -2வை வதம் செய்துவிடுகிறார் தளபதி..
தன் நெருங்கிய வில்லன் -2வின் மறைவால் கொந்தளிக்கும் வில்லன் -1 , தனது சென்டரல்/எக்மோர் அமைச்சர் நண்பர்/சொந்தக்காரர் (வில்லன் - 4) ஒருவரிடம்...
"அவன் சாதாரண ஆள் இல்ல...என் கண்ணுக்குள்ள விரல் விட்டு ஆட்டறான்" ..
மேலும் ரிவர்ஸ் பஞ்ச் - 1,ரிவர்ஸ் பஞ்ச் - 2, ரிவர்ஸ் பஞ்ச் - 3 சொல்கிறார்..
இதை கேட்டு அமைச்சர் மெளனமாக தான் சென்னை வந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்..

காட்சி - 8:
அமைச்சர் விமானம் தில்லியிருந்து சென்னை வந்தடைவதற்குள் -
நம் தளபதி வில்லன் -1 செய்யும் எல்லா தொழிலையும் தடுத்து நிறுத்த - தானும் அந்த (எல்லா சட்ட விரோத) தொழில்களில் குதிக்கிறார் - பெரும் பணக்காரர் ஆகிறார் - டாட்டா சுமோ வாங்குகிறார் - நோக்கியா 1100 மாடல் போனிலிருந்து - N97 மாறுகிறார்..
(கதாநாயகி / அம்மா / தங்கை / தம்பி ஆகியோர் இன்னும் சில சீன்களுக்கு தேவையில்லை.. அவர்களை கடைசி ஷெடியூலில் கூப்பிட்டு கொள்ளலாம்..)
அமைச்சர் (வில்லன் -4) தனது பதவி பலம் , பண பலம் , அடியாள் பலம் எல்லாம் கொண்டு நம் தளபதியை ..பிடிக்க பார்க்கிறார்..
ஆனால் தளபதி எப்போதும் போல தனது அறிவாற்றலால் தப்பித்து.. .அமைச்சரின் பதவி,பணம்,ஆள் பலத்திற்கு உலை வைக்க பார்க்கிறார்...இடையிடையே பல பல "பஞ்ச்" வசனங்கள் சொல்கிறார்..

காட்சி - 9:
இப்படி டாம் அண்ட் ஜேரி போல டென்ஷனாக போகும் படத்தில் , ஒரு அணுகுண்டை வைக்கிறார் வில்லன் - 4.
நம் தளபதியின் நெருங்கிய (தாய் / தங்கை / தம்பி / நண்பன்) ஆகியவர்களில் ஒருவரை வில்லன் - 4 மற்றும் வில்லன் - 1 சேர்ந்து போட்டுத் தள்ளுகிறார்கள்...
இதை பார்த்த கதாநாயகியையும் வில்லன் - 4 ருசிக்க பார்க்கிறார்/கடத்துகிறார்..
முதலில் நம் தளபதி சாவு வீட்டில் அழுது நடிக்கிறார் - எப்போதும் போல வாய் பொத்தி, தேம்பி தேம்பி அழுகிறார் தளபதி... அழும் ஈமோஷன் முடிவதற்குள்..கண்கள் சிவந்திட , புஜங்கள் புடைத்திட , இந்த உலகத்திற்கே கேட்கும் படி கத்துகிறார்... புலி போல் பாய்கிறார்..
தனது சுமோவை எந்த சிக்னலிலும் நிறுத்தாமல் .. மிக மிக விரைவாக ஓட்டி செல்கிறார்..
பாடல் - 5
(சூப்பர் பாஸ்ட் பாடலாக இருக்க வேண்டும் - இதை கேட்கும் ரசிகர் இரத்தம் தளபதி இரத்தம் போல் கொதிக்க வேண்டும் - அல்லது 1000 பாட்டில் குளுகோஸ் ஏற்றுவது போல் உணர வேண்டும்)

காட்சி - 10 :
காட்சி - 11 :
இந்த இரு காட்சிகளுக்கும் வருவதற்கு முன்பு தளபதி எப்படியும் ஒரு 200 ஆட்களை அடிதிருக்க வேண்டும்.. இது இயக்குனர் பொறுப்பு)

சண்டை
முதல் ரவுண்டு - 200 ஆட்கள்..
இரண்டாவது ரவுண்டு - 200 ஆட்கள்
மூன்றாவது ரவுண்டு - 400 ஆட்கள்..

இவர்களை தளபதி கை/கால்/ தலை/ கத்தி/ துப்பாக்கி/ சோடா பாட்டில்/டியூப் லைட்/தண்ணி தொட்டி/டாட்டா சுமோ என்று எதை வைத்தும் அடிக்கலாம் / கொல்லலாம்.. ஆனால் தளபதிக்கு அதிக பட்சம் இரண்டு கீறல்கள் மட்டுமே இருக்கலாம்..(படம் முழுவதும் தளபதிக்கு இரண்டு பிரஷ் சிவப்பு சாயம் மட்டுமே பயன் படுத்தப்படும்)

காட்சி - 12:
வில்லன் - 4 மற்றும் வில்லன் -1 ஆகியோரை ஆர்டர் வரிசையில் கொல்கிறார் நம் தளபதி..
இந்த சண்டை மட்டும் எப்படியும் ஒரு 10-15 நிமிடம் இருக்க வேண்டியது மிக முக்கியம்..
பின்
கதாநாயகியை காப்பாற்றுகிறார்..
ஊர் மக்கள் , போலீஸ் , முதல் அமைச்சர் , பிரதம மந்திரி , ஜனாதிபதி ஆகியோர் தளபதியின் வீர செயல்களை பாராட்டி ...
"ஊருக்கு உன்ன மாதிரி ஒருத்தன் இருந்தா...போதும் பா..
நம்ம நாடு எங்கையோ போய்டும்" என்பார்கள்...

அதற்கு நம் தளபதி..பவ்யமாக
"நான் ஒண்ணும் பெரிசா பண்ணல..
நான் ஒரு சாதாரண இந்திய குடிமகனா தப்ப தட்டிக்கேட்டேன் அவ்வளவு தான்
இதே மாதிரி எல்லோரும் தப்ப தட்டி கேட்டாலே நம்ம நாடு எங்கையோ போய்டும்"
என்பார்..

பின் இவருக்காக காத்துக்கொண்டிருக்கும் கதாநாயகி கைப்பிடித்து, மற்றும் தன் காமெடி நண்பர்களுடன் ஊருக்கு திரும்பி செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஆட்டோ ஏறி செல்வார்...

மீண்டும்
பாடல் -1 அல்லது பாடல் - 3 அல்லது பாடல் - 4
(பாடல் - 2 மற்றும் பாடல் - 5 இங்கு பயன்படுத்தக்கூடாது)


வணக்கம்..

5 நாட்களில் - யூ டியூபிலிருந்து ஹாலிவுட் வரை செல்வது எப்படி??

5 நாட்களில் - யூ டியூபிலிருந்து ஹாலிவுட் வரை செல்வது எப்படி??

இதை படித்து நீங்கள்..
"முடியவே முடியாது."
"பைத்தியக்காரன்"
என்று நினைத்துக்கொண்டு இந்த பதிவிற்கு வந்திருந்தாலும்..
கீழுள்ள செய்தியை(காணொளி) கண்டு..வியப்படைய போவது உறுதி..





மேலும் படிக்க:
http://www.boston.com/ae/movies/articles/2009/12/06/alvarezs_short_film_panic_attack_makes_him_hollywoods_next_big_thing/

சனி, 26 டிசம்பர், 2009

குறும்படம் - ஸ்கிஸியன் (Skhizein)

நம்மை சிந்திக்க வைக்கும் குறும்படம் - ஸ்கிஸியன் (Skhizein)
http://skhizein.com/

மனிதனின் கற்பனை சக்திக்கு இன்னொரு எடுத்துக்காட்டு!!


"தமிழ் படம்" பாடல்கள் - பெரிய திரையில் லொள்ளு சபா

தமிழ் படங்களுக்கு மணி கட்ட வந்து விட்டது ஒரு படம்..
ஆங்கிலத்தில் "ஹாட் சாட்ஸ்" படங்களின் வரிசையில்...தமிழ் திரையில் முதன்முதலாக வந்துவிட்டது.. முழுக்க முழுக்க கலாய்க்கும்... ஸ்பூஃப் (Spoof) படம்..

இந்த படத்தின் பாடல்களும்/மாதிரி காட்சிகளும் சில தினங்களுக்கு முன் வெளியிடபட்டது...

பாடல் 1 - "பச்ச மஞ்சள் ஒயிட் ரோஸ் தமிழன் நான்"
இளைய தளபதி முதல் சின்ன சூப்பர் ஸ்டார் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை .. இந்த பாடலில்.
இந்த பாடல் படத்தில் இடம் பெற்றால் "இளைய தளபதி" வருத்தப்படப் போவது.. என்பது உறுதி.. :-D
லொள்ளு சபாவில் விஜயை கலாய்த்த "போக்கிரி - பேக்கிரி" விட.. இந்த பாடல் ஒரு படி மேல் போகிறது...இதை கேட்டு.. சிரிக்காமல் இருக்க முடியாது

"2011 நம்ம கையில..
சந்திப்போம்டா தோழா நம்ம சட்டசபையில"

இந்த பாடலின் "பஞ்ச்" உங்களுக்கு பாடலின் நோக்கத்தை உங்களுக்கு புரிய வைத்திருக்கும்..






பாடல் 2 - "ஓ மஹா சியான்"
இந்த பாடல் எழுதியர் நிச்சயம் பெரும் புலவராகத்தான் இருக்கவேண்டும்..

இது வரை..
"ரண்டக" , "ஹசிலிபிசிலி" ,"ஓ மஹா சியான்", "டைலாமோ", "பலேலக்கா" போன்ற வார்த்தைகள் தமிழா? தெலுங்கா? இந்தியா? என்ற குழப்பித்திற்கு உண்மையான விடை அழிக்கிறது இந்த பாடல்..

தமிழ் சினிமாவில் மாபெரும் மைல் கல்லாக இதை நாம் கருதலாம்... :-D


பாடல் 3 - "ஒரு சூறாவளி"
இந்த பாடல் நம்ம தலைவர்.. "சிவாஜி தி பாஸ்" படத்தில் ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு சிங்கமாய் புறப்படும் காட்சியை அடிதளமாக கொண்டு அமைக்கபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.. இது வரை இந்த படத்தின் "படங்கள்" இதையே காட்டுகின்றன..



பாடல் 4 - குத்து விளக்கு
குத்து பாடல்கள் இல்லையேல் தமிழ் படங்கள் இல்லையேல் என்பதை விளக்குவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
"குத்து விளக்கு .. குத்து விளக்கு ..
நான் ஒரு குடும்ப குத்து விளக்கு"
:-)
சூப்பர்..


பாடல் 5 - தமிழ் படம் தீம்
"No Logic
No Logic
Too Much.
Too Much.
முடியல
கடவுளே
தாங்கல..
ஓவரு..
"
இது தான் இந்த பாடலின் வரிகள்..
இது அணைத்தும் இன்றைய தமிழ் படங்களுக்கு மிக பொருந்தும் ஒன்று..
இந்த உண்மையை இன்னொரு படம் சொல்ல போவதை நம் சினிமாகாரர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாயுள்ளேன்..

இதற்கு முன் இதைப்போல வந்த "மகாநடிகன்" படத்தை திரைக்கலைஞர்கள் புறக்கணித்தது நம் நினைவில் இருக்கலாம்...

அதற்கு முன்

"கிட்டத்தட்ட 80-களின் இறுதியில் டி.டி-1 தொலைகாட்சியில் ஞாயிறு காலை தொடராக வந்தது. அப்போது தமிழ் சினிமா தாய்மார்கள் மற்றும் பாமரர்களின் கையில் இறுக்கமாக மாட்டிக்கொண்டிருந்த சமயம். எனவே லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு அபத்தங்களின் கலவையாக திரையில் மயக்கிக்கொண்டு இருந்தது தமிழின் வணிகரீதியான சினிமா. இந்த நாடகம் மூலம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை நாடி வந்த தயாரிப்பாளர்களையும், சினிமா ரசிகர்களையும் ஏமாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த கதாசிரியர்களை ஒரு பிடி பிடித்து இருந்தார் சோ"

இதுவும் திரைக்கலைஞர்களை கோபமடைய செய்தது..

திரைக்கலைஞர்கள் "போலீஸ், அரசியல்வாதி,பத்திரிக்கையாளர்" என்று யாரையும் விட்டுவைக்காமல் கிண்டலடிப்பார்கள்.. ஆனால் அவர்களை பற்றி கிண்டலடித்தால் மட்டும் அவர்கள் கோபப்படுவதேன்?"



தமிழ் படம் என்ற பூனைக்கு..
இன்னொரு பூனையே மணி கட்டும் முயற்சி தான் இந்த "தமிழ் படம்" :-D

வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஸ்டீவ் ஜொப்ஸ்

ஸ்டீவ் ஜொப்ஸ் - 2005ல் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைகழகத்தில் பேசியது:



தனித்திரு!!
விழித்திரு!!
பசித்திரு!!

செவ்வாய், 22 டிசம்பர், 2009

திங்கள், 21 டிசம்பர், 2009

திருவெம்பாவை




திருச்சிற்றம்பலம்


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்:
தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை
நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய
கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்
போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை
வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே
விம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே
தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே !
இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

பணம்!!

பணம் சம்பாதிக்க எளிய வழி.. :-)


ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ஓர் தாயின் கண்ணீர்




ஓர் உடல் ஈருயிராய் இருந்தோம்..
என் கண்மணியே,

பிறந்த சில நொடியினில் "அம்மா" என்றாய்
என் கண்மணியே,

என் உலகை உன் உலகாய் மாற்றினாய்
என் கண்மணியே,

உன் சிரிப்பை என் சிரிப்பாய் மாற்றிக்கொண்டேன்
என் கண்மணியே,

ஒவ்வொரு நொடியிலும் நான் "என்னை" உணர்ந்தேனடா
என் கண்மணியே,

இந்த அம்மா முகம் பார்த்து.. "அம்மா" என்பாயோ,
என் கண்மணியே

என் முலையின் பால் இன்று இரத்தமாய் வழிகின்றதே
என் கண்மணியே

இன்று, என்னை விட்டு சென்றாயோ
என் கண்மணியே!!

சனி, 19 டிசம்பர், 2009

அவதார் 3D

இன்று திரைக்கு வந்த.. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் (3D) படம் பார்க்க நேர்ந்தது..

கதை எப்போதும் போல உலகை காப்பற்ற கதாநாயகன் எடுக்கும் முயற்சிகள் தான்... ஆனால் அவன் காக்க நினைக்கும் உலகின் பெயர் .. "பண்டோரா"

இந்தி படமான "நமக்ஹராம்" படத்தின் கதையை பெரும் பொருட்செலவில் எடுத்தாக நினைத்து கொள்ளலாம்...

தெரிந்த கதையாக இருப்பினும் , நம்மை பிரம்மிக்க வைப்பது இதன் அனிமேஷன்.. நம்மை ஒரு புது உலகிற்கு கொண்டு போவது என்பதை யாராலும் மறுக்க முடியாது..கடந்த பத்து வருடங்களில் வெளியான மிகச்சிறந்த அனிமேஷன் படமாக நான் இதை கருதுகிறேன்..

மனிதர்களால் இப்படி கற்பனை செய்ய முடியுமா.. என்பது போல அமைந்த காட்சிகள் ஏறாளமாய் உள்ளன... இதனை குழந்தைகள்... தங்கள்
தலைமுறையின் "Star Wars" என்று நிச்சயம் கருதுவார்கள்..



ஆயிரத்தில் ஒருவன் கதையில் எம்.ஜி.ஆர் ஒரு தனி நாட்டிற்காக போராடினால் எப்படி இருந்திருக்கோம் அது போல வீர வசனம் பேசி தலைவர் மகளை காதலித்து, பின் தன்னை ஏற்ற மக்களுக்காக போராடும் நம் கதாநாயகன்...அவதார் .. நிஜ(மனித)  முகம் மறந்து போவது என்பது உறுதி..

கூகுள் செய்து பார்த்தில்.. இவர் நடத்தி சில படங்கள் நமக்கு தெரியவந்தது...அனிமேஷனுக்கு முக்கியதுவம் உள்ள இப்படத்தில் மனித முகங்கள் தங்கள் தீய குணம் காட்ட மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன..

படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணம் இரண்டு பேர் - ஜான் லாண்டோ , ஜேம்ஸ் காமரூன்

இப்படம் எடுத்த முறையே (Virtual Production) திரைப்பட வரலாற்றை மாற்ற வாய்ப்புகள் உண்டு..
இதை பற்றி இதன் தயாரிப்பாளர் கூறியது .. கீழுள்ள காணொளியில் உள்ளது..



ஜேம்ஸ் காமரூன் - எழுதிய , இயக்கிய இப்படம் அவரின் டைடானிக் சாதனையை முறியடிக்கும்..
இந்த மனிதரை பாராட்ட வேண்டியது கதைகாக அல்ல... எடுத்துக்கொண்ட கதையை எந்த முறையில் கற்பனை செய்த விதத்துக்காக.. இப்படியும் யோசிக்க முடியுமா நம்மை ஆச்சரிய பட வைப்பதற்காக... மனிதனின் கற்பனை எல்லையை மேலும் ஒரு 100 மைல்கள் உயர்த்தியதற்காக..இந்த வருடத்தின் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை (கோல்டன் குலோப்) இவர் வாங்கப்போவது உறுதி!! குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!!


பல 3D படங்கள் இதற்கு முன் பார்த்ததுண்டு.. ஆனால் இம்முறை நான் பார்த்தது.. என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தது..

இப்படத்தை குழந்தைகளுடன் சென்று 3Dயில் பார்க்குமாறு பரிந்துரைப்பேன்

புதன், 16 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் - ஃபிளாஷ் நியூஸ்

இன்று மின்னஞ்சலில் வந்த வேட்டைக்காரன் - ஃபிளாஷ் நியூஸ் படித்து.. அதிர்ந்து போனேன்.



ஏன் மக்களுக்கு விஜய் மீது இவ்வளவு கோபம்/காண்டு என்று தெரியவில்லை...
இவரது படங்கள் ஓடுவது இனி சிரமம் தான்

செவ்வாய், 15 டிசம்பர், 2009

திங்கள், 14 டிசம்பர், 2009

மாநிலம் Vs. நாடு

நடந்து வரும் தெலுங்கானா பிரச்சனையை பற்றி படிக்கும் போது எனக்கு தோன்றிய கேள்விகள்:

தனி மாநிலம் கோர தலைவர்கள் கூறும் காரணங்கள் :

அ) தங்கள் உரிமைகளை ஒடுக்கப்பட்டுள்ளன,
ஆ) தங்கள் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டுள்ளன,
இ) தங்கள் கலச்சாரம் சிதைந்து போகின்றது என்றும்
ஈ) தங்கள் வாழ்க்கை நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை

என்று சொன்னாலும்...
தலைவர்கள் கொள்ளையடிக்கை இன்னொரு தனி மாநிலம் அமைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது...

எப்படி இருந்தாலும் தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொரு நபரும் எந்த ஒரு தலைவரையும் பின்பற்றாமல் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் என்று எடுத்துக்கொண்டால்..

இவர்களது தனி மாநில கோரிக்கை - தனி நாடு கோரிக்கையில் இருந்து எந்த விதத்தில் வேறுபடுகிறது...??

தன் சமூகத்தையும் / தன் நலனையும் கருத்தில் கொண்டு போராடும் இவர்கள்.. ஏன் தனி மாநிலத்திற்காக மட்டும் போராட வேண்டும்.??

எந்த காரணத்தினால் இவர்கள் தனி நாட்டிற்காக போராட மறுக்கின்றனர்?
இல்லை..
இன்று தனி மாநிலத்திற்கு போராடும் இவர்கள் , தனி நாட்டிற்க்காக போராட எத்தனை நாட்கள்/வருடங்கள் பிடிக்கும்??

எனக்கு ஏனோ... இப்போராட்டம் தலைவர்களின் சுயநலத்திற்க்காக மட்டுமே நடத்தப்படுவதாக தோன்றுகிறது...

தனி மனித உரிமையின் அடிபடையில் இது அமைந்திருந்தால்..
இது தனி நாடு கோரிக்கையாக அமைந்திருக்கும் என்பதே என் கருத்து..

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ராக்கெட் சிங் - அப்துல் கலாம்

கதாநாயகன் - கதாநாயகி டூயட்..
எப்போதும் கத்திக்கொண்டே இருக்கும் வில்லன்..
அதி புத்திசாலியான கதாநாயகன்..
2 கோடி செலவில் பாடல் காட்சி..
பெரிய புகழ் பெற்ற நடிகர்கள்..

இவை ஏதும் இன்றி...

ஒரு படம் வெற்றி பெற முடியும் என்பதிற்கு ஒரு எடுத்துக்காட்டு
"ராக்கெட் சிங் - சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர்"

எடுத்துக்கொண்ட கதையை உண்மையான முறையில் சித்தரித்த ராக்கெட் சிங்.. இன்றைய மிகைப்படுத்தப்பட்ட இந்தி சினிமாவில் இருந்து விலக நிர்க்கப்போவது என்பது உறுதி...

படத்தின் கதை மிக எளியது..
கல்லூரி படிப்பு முடித்து வேலை செய்யும் கனவோடு வரும் இளைஞன் ,எப்படி தடைகள்/பொய்கள் கடந்து உண்மையான முறையில் தனது கனவை அடைகிறான் என்பது தான் கதை...

ஒரு வரியில் - இந்தியாவில் "மைக்கல் டேல்" ஒரு சீக்கியராக பிறந்திருந்தால்??

நடித்த அணைவரும் தங்கள் கதாபாத்திரங்களை அருமையாக செய்துள்ளனர்..இவர்களை இதற்கு முன் படங்களில் பார்த்த ஞாபகம் இல்லை...

அலுவகத்தில் எப்போதும் இணையத்தில் அறைக்குறை பெண்களின் படத்தை பார்க்கும் - டி.சந்தோஷ்
எப்போதும் தனக்கு கீழ் வேலை பார்ப்போரை வாட்டிவதைக்கும் அதிகாரி - நவீன் கெளசிக்
எல்லோரும் "ஐடம்" என்று அழைக்கும் வரவேற்பாளர் - கோஹர் கான்
"கப்-பிளேட்" என்று தன்னை அழைப்பதை வெறுக்கும் பணியாளர் - முகேஷ் பட்
இவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் உரிமையாளராக - மனிஷ் செளதிரி.

இவர்கள் மிக தேர்ந்த நடிகர்களாக மின்னுகின்றனர்..

இப்படத்தின் உண்மையான கதாநாயகர்கள்..

இயக்குனர் - ஷிமித் அமின் மற்றும் .
கதை / திரைக்கதை எழுத்தாளர் - ஜெய்தீப் சாஹ்னி

ஷிமித் அமின் இதற்கு முன் அளித்த "சக் தே" நமக்கு ஞாபகம் இருக்கலாம்..இனி வரும் காலத்தில் எனது எதிர்ப்பார்ப்பை அதிக படுத்தும் இயக்குனர் பட்டியலில் இவரும் சேர்ந்துக்கொண்டார்..

ஜெய்தீப் சாஹ்னி - இப்படத்தின் முக்கிய நபர் - இதற்கு முன் எழுதிய "கோசலா கா கொஷலா" , "சக் தே" தொடர்ந்து இப்படத்தின் மூலம் நடுத்தர மக்களின் வாழ்க்கையை வெற்றி பெற செய்திருக்கிறார்..

இவரது கதைகள் நாம் ஆராய்ந்து பார்த்தால்..கரு ஒன்று தான்..
"How the Underdog wins"
எப்படி "ஒடுக்கப்பட்ட மனிதர்கள் வெற்றி அடைவது"
மற்றொரு முக்கியமான ... அஸ்திரம்.."கனவு"
இதனால் இக்கதைகளை..
"ஒடுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் கனவுகளை அடைவது" என்று நாம் புரிந்துக்கொள்ளலாம்..
ஒரு வரியில் இவரது கதையின் கருவை சுருக்கினாலும்..
இவரது கதை/திரைக்கதைக்கும் புதிய பரிமாணம் தருவது.. இவரது "களம்"
நடுத்தர குடும்பத்தின் தினசரி வாழ்க்கையில் பின்னிபிணையும் கனவு , வெற்றி இவரது கதைகளை பெரும்பாலானோர் ரசிக்கும்படி செய்துள்ளது..

என்றாவது படங்களை இயக்கும் மிதப்பில் இருப்பவர்கள்...இவரது கதைகள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது..
"நடுத்தர வாழ்க்கை / ஒருப்படாதவர்கள் / ஒடுக்கப்பட்டவர்கள்"
"கனவு"
"போராட்டம்"
"உழைப்பு"
"வெற்றி"

என்னை பொருத்தவரையில்..

ராக்கெட் சிங் - அப்துல் கலாமின் உண்மையான பிரதிநிதி!!
Rocket Singh - Brand Ambassador for "the dream machine - Adbul Kalaam"


வியாழன், 10 டிசம்பர், 2009

மரணப்போட்டி!!

மரணப்போட்டி!!

இந்த காணொளி கண்டு இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்..


திங்கள், 7 டிசம்பர், 2009

பென்னி லாவா!!

"பெண்ணின் மனதை தொட்டு" படத்தில் இடம் பெற்ற "கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ" பாடல் நமது நினைவில் இருக்கலாம்...

ஆனால் இந்த பாடல் உலக அளவில் ரசிக்கப்படுகின்றது...

பிரபு தேவாவவையும் ... ஸ்.ஏ.ராஜ்குமாரையும்... உலக அளவில் அடையாளம் காட்டிய இந்த பாடலையும் அதன் பிற வடிவங்களையும் கண்டு ரசிப்பீராக... :-)

உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி... மக்களை ஒன்று சேர்த்த.. இந்த பாடலை.. இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ் பாடலாக... தேர்வு செய்யலாம்... :-D






























முடியல... நீங்களே கூகுள் பண்ணுங்க..
இந்த பாட்ட இவ்வளவு நேரம் கேட்டு ஒரே தலைவலி..:-)

சுருக்கமா.. சொல்லனும்னா..
இந்தியாவின் அணு ஆயுதங்களை விட..
மிக சக்திவாய்ந்தது..
இந்த "பென்னி லாவா"!!!

:-D

கனவு காணும் வாழ்க்கை யாவும்




கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே...
இறக்கின்ற தேதி..
இருக்கின்றதென்பது..
மெய் தானே...

ஆசைகள் என்ன..
ஆசைகள் என்ன..
ஆணவம் என்ன..
உறவுகள் என்பதும்
பொய் தானே

உடம்பு என்பது..
உடம்பு என்பது..
உண்மையில் என்ன..??
கனவுகள் வாங்கும் பை தானே!!

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

காலங்கள் மாறும்.
காலங்கள் மாறும்.
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்..

தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
போனது போக..
எது மீதம்..

பேதை மனிதனே
பேதை மனிதனே
கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

பேசப்படாது!!



நிலை
சமுதாயத்தில் பெண்ணின் நிலை!!


தவம்
இத்தனை ஆண்டுகள்
உன் கண்களின் வினாக்கள் என் தூக்கம் பறித்தன
உன் கூந்தலின் விடுகதைகளில் என் வரிகள் சிக்கின.. 
உன் புன் முறுவலின் சந்தோஷத்தில் என் மனமும் குதித்தது..


இன்றும் உன் ஓர் சொல் வார்த்தைக்காக...தவத்தில் நான்!


பேசப்படாது
பேசப்படாது.. 
கேட்கக்கூடாது
சொல்லமுடியாது..
திரிக்கமுடியாது...
சத்தமில்லை..
முத்தமில்லை


உதடுகள் சேர்ந்திடாமல்..!!


ஜனநாயகம்
ஜனநாயகம்


சுதந்திரம்
எழுத்துரிமை 
பேச்சுரிமை 
நீதி
நேர்மை


இவை யாவும் ..
அரசியல் கட்சியில் உள்ளவருக்கு மட்டும்!!


பேசப்படாது
கலவி
கல்வி
மதம்
ஜாதி
தலித்
ஐய்யர்
முஸ்லிம்
இந்து
ராமர்
பெண்ணியம்
ஆதிமுக
திமுக
லஞ்சம்
வாக்குறுதி
மோசடி
விசாரணை கமிஷன்
தேர்தல் கமிஷன்

ஓட்டு எண்ணிக்கை
கலைஞர் குடும்பம்
தமிழ் கலாசாரம்
இலங்கை தமிழர்
தமிழர் படுகொலை
புலிகள்
ஈழம்
புத்த குருக்கள்
கிரிஸ்து
கடவுள்


பேசப்படாது!!
தமிழர் தவிக்கும் தமிழ் நாட்டில்!! 

சனி, 5 டிசம்பர், 2009

இரு விரல்கள்

பிறந்த சில நாட்கள்..
உள்ளங்கையுடன் ஒன்றாயிருந்த..விரல்கள்..

காலப்போக்கில் தனியே பிரிந்தன.
தன்னை பற்றி மட்டும் சிந்தித்து வந்தன...

பின்.. ஓர் நாள் இது நிகழ்ந்தது... :-D