காதல் கதை - பாகம் 2 வெளியாகியுள்ளதா என்று நீங்கள் சந்தேகம் கொள்ளும் முன்பு,
சில மாதங்களுக்கு முன் வெளி வந்த "காதல் கதை" படம் தான் இது..
இப்போது தான் நேரம் கிடைத்து... பார்க்க நேர்ந்தது.
இப்படம் வேலு பிராபாகரனின் சுய புராணம் போல் இருந்தாலும்..
சில இடங்களில்..
"மச்சான்.. நீ என்ன தான் சொல்ல வர" என்று கேட்க தோன்றினாலும்..
பல இடங்களில் ..
"பெண்களின் மேல் இருக்கும் மோகம் தீர்க்க பெண்களின் உடலை முழுமயாக காட்ட முயிற்சிருந்தாலும்.." (என்று வேலு பிராபாகரன் கூறுகிறார்)
சில இடங்களில்..
"காமம் மட்டுமே உண்மை" என்று அவரின் அனுபவத்தை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டாலும்..
இப்படத்தில் தென்பட்ட நல்லவை சில
அ)காட்சிகளின் எதார்த்தம் - சுப்பிரமணியபுரம், ரேனிகுண்டா, பசங்க, போன்ற படங்களை எதோ இயக்குனர் சங்கர் படங்கள் போல் தோன்ற வைப்பது உறுதி..
இக்கருத்தை எனது பல நண்பர்கள் மறுத்து - இப்படம் "அமெச்சூராக இருந்தது என்று கூறுகின்றனர்.
ஆ)நீங்கள் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் படத்தின் முதல் பத்து நிமிடங்களில் வேலு பிராபாகரன் கேட்கும் கேள்விகள் நியாயமான கருத்தாகவே தோன்றும்.. உங்களை யோசிக்க தூண்டும்..
இ)படத்தில் நாம் பார்க்கும் முகங்கள் அணைத்தும் (2-3 தவிர்த்து) புது முகங்கள் , இருப்பினும் அவர்களின் நடிப்பு மிக நேர்த்தியாக உள்ளது.. எந்த ஒரு காட்சியிலும் விஜய் படத்தில் "இப்படி எவனாவது செய்வானா" என்று நாம் கேட்கும் கேள்வியினை இப்படத்தில் நம்மால் கேட்ட முடிவதில்லை..(வே.பி வரும் காட்சிகளை தவிர)
ஈ)பெண்களை அழகு பொருட்களாக பயன்படுத்திடும் தமிழ் படங்களின் நடுவே, பெண்களும் மனிதர்கள் தான் என்ற இப்படத்தின் கருத்து (பல கருத்தில் இதுவும் ஒன்று) தனித்து நின்றாலும்.. அக்கருத்தை இப்படத்தில் வெளிபடுத்திய விதம் தான், இப்படத்தையும் குப்பையான பிற தமிழ் படங்களுடன் சேர்த்துவிடுகிறது.
மற்றபடி இப்படத்தை பற்றி சில குறிப்புகள்,
இப்படத்தில் வரும் அணைத்து பெண்களும் படுக்க தயார் நிலையிலே உள்ளனர்..
பெண்ணின் மார்பை பற்றி ஆவேசமாக வசனம் பேசும் வே.பி கூட அதே மார்பங்களை காட்டியே ஆண்களை திருத்த நினைப்பது காமடியாக உள்ளது.
பெண்களின் நிலை பற்றி பேசும் படத்தில் ஓர் பெண்ணையும் உயர்வு படுத்தி காட்டாதது.. வே.பி யை படத்தில் வரும் ஆசிரியருக்கு ஓப்பிடலாம்.
இப்படம் எடுக்கப்பட்ட/விவாதிக்கப்பட்ட வருடங்களில் வே.பி படத்தின் கதையை முற்றிலும் மறந்து விட்டது பல காட்சிகளில் தெரிகிறது.
அவர் சொல்ல வந்தது - பெண்களின் அவல நிலையையா? அல்ல ஆண்களின் காம வெறியையா? அல்ல கடவுள் இல்லை என்ற கருத்தையா? அல்ல ஜாதி இல்லை என்ற கருத்தையா? அல்ல அவரின் சுய புராணத்தையா?? - வே.பியின் குழப்பத்தில் நாமும் குழம்பி போகிறோம?
கதைகள் சொல்ல ஆயிரம் வழிகள் உண்டு..
ஆனால் கருத்து நல்லதாக இருப்பினும்
கதை சொன்ன விதம் முற்றிலும் எதிர்மறையாக உள்ளது..
"காதல் கதை"யில்..
இப்படத்தில் இடம் பெற்ற சில கேள்விகள்:
1) நம் நாட்டில் நூறு கோடி மனிதர்கள் இருந்தும் , உலக மக்கள் அணைவராலும் பயன்படுத்தப்படும் எந்த ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பையும் நிகழ்த்தாது ஏன்??
2) பெண் தெய்வங்களை அதிக அளவில் கும்பிடும் நம் நாட்டில், அதிக அளவில் கற்பழிப்பு நடப்பது ஏன்?
3) ஜாதி பாகுபாடு இன்றி எல்லா ஜாதியிலும் பெண்ணை ஆண் அடிமை படுத்துவது ஏன்?
4) கலவி பற்றி பேச மறுக்கும் நாட்டில் அதிகப்படியாக இணையத்தில் கலவி தேடுவது எதனால்?
5) நம் உடம்பின் மேல் நமக்கு ஏன் இந்த தாழ்வான எண்ணம்?? சிறு வயதிலிருந்தே நம் மனதில் இதை விதைப்பது ஏன்?
6) கலவி கடவுளுக்கு எதிரானதாக கருதப்படுவது ஏன்?
7) உயிரினங்கள் எல்லாவற்றைப்போல நமக்கும் கலவி பற்றி தோன்றுவது இயற்கை என்றால்? அதை மனிதன் ஏற்க நினைப்பது ஏன்?
8) மேலை நாடுகளில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூறும் வே.பி, அங்கு நடக்கும் பாலியில் கொடுமைகளையும் கணக்கில் கொண்டு பேசவேண்டும்.
வே.பி கடவுள் இல்லை, ஜாதி இல்லை, காதல் இல்லை என்று சொல்லி படம் எடுத்தாயிற்று... அடுத்து என்ன படம் எடுப்பார். என்பது அவருக்கே வெளிச்சம்..
அடுத்த படம் ............"மனிதனே இல்லை" ;-)
வெள்ளி, 1 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக