சனி, 26 டிசம்பர், 2009

"தமிழ் படம்" பாடல்கள் - பெரிய திரையில் லொள்ளு சபா

தமிழ் படங்களுக்கு மணி கட்ட வந்து விட்டது ஒரு படம்..
ஆங்கிலத்தில் "ஹாட் சாட்ஸ்" படங்களின் வரிசையில்...தமிழ் திரையில் முதன்முதலாக வந்துவிட்டது.. முழுக்க முழுக்க கலாய்க்கும்... ஸ்பூஃப் (Spoof) படம்..

இந்த படத்தின் பாடல்களும்/மாதிரி காட்சிகளும் சில தினங்களுக்கு முன் வெளியிடபட்டது...

பாடல் 1 - "பச்ச மஞ்சள் ஒயிட் ரோஸ் தமிழன் நான்"
இளைய தளபதி முதல் சின்ன சூப்பர் ஸ்டார் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை .. இந்த பாடலில்.
இந்த பாடல் படத்தில் இடம் பெற்றால் "இளைய தளபதி" வருத்தப்படப் போவது.. என்பது உறுதி.. :-D
லொள்ளு சபாவில் விஜயை கலாய்த்த "போக்கிரி - பேக்கிரி" விட.. இந்த பாடல் ஒரு படி மேல் போகிறது...இதை கேட்டு.. சிரிக்காமல் இருக்க முடியாது

"2011 நம்ம கையில..
சந்திப்போம்டா தோழா நம்ம சட்டசபையில"

இந்த பாடலின் "பஞ்ச்" உங்களுக்கு பாடலின் நோக்கத்தை உங்களுக்கு புரிய வைத்திருக்கும்..






பாடல் 2 - "ஓ மஹா சியான்"
இந்த பாடல் எழுதியர் நிச்சயம் பெரும் புலவராகத்தான் இருக்கவேண்டும்..

இது வரை..
"ரண்டக" , "ஹசிலிபிசிலி" ,"ஓ மஹா சியான்", "டைலாமோ", "பலேலக்கா" போன்ற வார்த்தைகள் தமிழா? தெலுங்கா? இந்தியா? என்ற குழப்பித்திற்கு உண்மையான விடை அழிக்கிறது இந்த பாடல்..

தமிழ் சினிமாவில் மாபெரும் மைல் கல்லாக இதை நாம் கருதலாம்... :-D


பாடல் 3 - "ஒரு சூறாவளி"
இந்த பாடல் நம்ம தலைவர்.. "சிவாஜி தி பாஸ்" படத்தில் ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு சிங்கமாய் புறப்படும் காட்சியை அடிதளமாக கொண்டு அமைக்கபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.. இது வரை இந்த படத்தின் "படங்கள்" இதையே காட்டுகின்றன..



பாடல் 4 - குத்து விளக்கு
குத்து பாடல்கள் இல்லையேல் தமிழ் படங்கள் இல்லையேல் என்பதை விளக்குவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
"குத்து விளக்கு .. குத்து விளக்கு ..
நான் ஒரு குடும்ப குத்து விளக்கு"
:-)
சூப்பர்..


பாடல் 5 - தமிழ் படம் தீம்
"No Logic
No Logic
Too Much.
Too Much.
முடியல
கடவுளே
தாங்கல..
ஓவரு..
"
இது தான் இந்த பாடலின் வரிகள்..
இது அணைத்தும் இன்றைய தமிழ் படங்களுக்கு மிக பொருந்தும் ஒன்று..
இந்த உண்மையை இன்னொரு படம் சொல்ல போவதை நம் சினிமாகாரர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாயுள்ளேன்..

இதற்கு முன் இதைப்போல வந்த "மகாநடிகன்" படத்தை திரைக்கலைஞர்கள் புறக்கணித்தது நம் நினைவில் இருக்கலாம்...

அதற்கு முன்

"கிட்டத்தட்ட 80-களின் இறுதியில் டி.டி-1 தொலைகாட்சியில் ஞாயிறு காலை தொடராக வந்தது. அப்போது தமிழ் சினிமா தாய்மார்கள் மற்றும் பாமரர்களின் கையில் இறுக்கமாக மாட்டிக்கொண்டிருந்த சமயம். எனவே லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு அபத்தங்களின் கலவையாக திரையில் மயக்கிக்கொண்டு இருந்தது தமிழின் வணிகரீதியான சினிமா. இந்த நாடகம் மூலம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை நாடி வந்த தயாரிப்பாளர்களையும், சினிமா ரசிகர்களையும் ஏமாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த கதாசிரியர்களை ஒரு பிடி பிடித்து இருந்தார் சோ"

இதுவும் திரைக்கலைஞர்களை கோபமடைய செய்தது..

திரைக்கலைஞர்கள் "போலீஸ், அரசியல்வாதி,பத்திரிக்கையாளர்" என்று யாரையும் விட்டுவைக்காமல் கிண்டலடிப்பார்கள்.. ஆனால் அவர்களை பற்றி கிண்டலடித்தால் மட்டும் அவர்கள் கோபப்படுவதேன்?"



தமிழ் படம் என்ற பூனைக்கு..
இன்னொரு பூனையே மணி கட்டும் முயற்சி தான் இந்த "தமிழ் படம்" :-D

4 கருத்துகள்:

  1. சார்! நல்ல விமர்சனம்! படம் வரட்டும்! பார்த்துடுவோம்!

    பதிலளிநீக்கு
  2. http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-29-27/2009-04-21-23-05-53/4758-tamil-padam-songs-and-review

    உங்க பதிவை இணைச்சிருக்கோம்! அனுமதி கேட்க தொடர்பு கொள்ள முடியல! மன்னிச்சிடுவீங்கல்ல!?

    பதிலளிநீக்கு
  3. என் பதிவை பயன்படுத்தியமைக்கு..நன்றி

    பதிலளிநீக்கு
  4. "பல்லேலக்கா" (Balalaika) ஒர் ரஷ்ய இசைக்கருவி . கிட்டாரைப் போல் இதையும் வாசிப்பாங்க. AR Rahman தான் இதனை பாடலில் சொருகியதா நா.முத்துக்குமார் ஒருவாட்டி சொல்சியிருந்த்தாரு.

    பதிலளிநீக்கு