சனி, 19 டிசம்பர், 2009

அவதார் 3D

இன்று திரைக்கு வந்த.. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் (3D) படம் பார்க்க நேர்ந்தது..

கதை எப்போதும் போல உலகை காப்பற்ற கதாநாயகன் எடுக்கும் முயற்சிகள் தான்... ஆனால் அவன் காக்க நினைக்கும் உலகின் பெயர் .. "பண்டோரா"

இந்தி படமான "நமக்ஹராம்" படத்தின் கதையை பெரும் பொருட்செலவில் எடுத்தாக நினைத்து கொள்ளலாம்...

தெரிந்த கதையாக இருப்பினும் , நம்மை பிரம்மிக்க வைப்பது இதன் அனிமேஷன்.. நம்மை ஒரு புது உலகிற்கு கொண்டு போவது என்பதை யாராலும் மறுக்க முடியாது..கடந்த பத்து வருடங்களில் வெளியான மிகச்சிறந்த அனிமேஷன் படமாக நான் இதை கருதுகிறேன்..

மனிதர்களால் இப்படி கற்பனை செய்ய முடியுமா.. என்பது போல அமைந்த காட்சிகள் ஏறாளமாய் உள்ளன... இதனை குழந்தைகள்... தங்கள்
தலைமுறையின் "Star Wars" என்று நிச்சயம் கருதுவார்கள்..



ஆயிரத்தில் ஒருவன் கதையில் எம்.ஜி.ஆர் ஒரு தனி நாட்டிற்காக போராடினால் எப்படி இருந்திருக்கோம் அது போல வீர வசனம் பேசி தலைவர் மகளை காதலித்து, பின் தன்னை ஏற்ற மக்களுக்காக போராடும் நம் கதாநாயகன்...அவதார் .. நிஜ(மனித)  முகம் மறந்து போவது என்பது உறுதி..

கூகுள் செய்து பார்த்தில்.. இவர் நடத்தி சில படங்கள் நமக்கு தெரியவந்தது...அனிமேஷனுக்கு முக்கியதுவம் உள்ள இப்படத்தில் மனித முகங்கள் தங்கள் தீய குணம் காட்ட மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன..

படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணம் இரண்டு பேர் - ஜான் லாண்டோ , ஜேம்ஸ் காமரூன்

இப்படம் எடுத்த முறையே (Virtual Production) திரைப்பட வரலாற்றை மாற்ற வாய்ப்புகள் உண்டு..
இதை பற்றி இதன் தயாரிப்பாளர் கூறியது .. கீழுள்ள காணொளியில் உள்ளது..



ஜேம்ஸ் காமரூன் - எழுதிய , இயக்கிய இப்படம் அவரின் டைடானிக் சாதனையை முறியடிக்கும்..
இந்த மனிதரை பாராட்ட வேண்டியது கதைகாக அல்ல... எடுத்துக்கொண்ட கதையை எந்த முறையில் கற்பனை செய்த விதத்துக்காக.. இப்படியும் யோசிக்க முடியுமா நம்மை ஆச்சரிய பட வைப்பதற்காக... மனிதனின் கற்பனை எல்லையை மேலும் ஒரு 100 மைல்கள் உயர்த்தியதற்காக..இந்த வருடத்தின் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை (கோல்டன் குலோப்) இவர் வாங்கப்போவது உறுதி!! குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!!


பல 3D படங்கள் இதற்கு முன் பார்த்ததுண்டு.. ஆனால் இம்முறை நான் பார்த்தது.. என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தது..

இப்படத்தை குழந்தைகளுடன் சென்று 3Dயில் பார்க்குமாறு பரிந்துரைப்பேன்

1 கருத்து:

  1. நானும் இதைப்பற்றி பதிவிட்டுள்ளேன். சென்று பாருங்கள்.

    http://blogsenthil.blogspot.com/2009/12/blog-post.html

    பதிலளிநீக்கு