இன்று திரைக்கு வந்த.. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் (3D) படம் பார்க்க நேர்ந்தது..
கதை எப்போதும் போல உலகை காப்பற்ற கதாநாயகன் எடுக்கும் முயற்சிகள் தான்... ஆனால் அவன் காக்க நினைக்கும் உலகின் பெயர் .. "பண்டோரா"
இந்தி படமான "நமக்ஹராம்" படத்தின் கதையை பெரும் பொருட்செலவில் எடுத்தாக நினைத்து கொள்ளலாம்...
தெரிந்த கதையாக இருப்பினும் , நம்மை பிரம்மிக்க வைப்பது இதன் அனிமேஷன்.. நம்மை ஒரு புது உலகிற்கு கொண்டு போவது என்பதை யாராலும் மறுக்க முடியாது..கடந்த பத்து வருடங்களில் வெளியான மிகச்சிறந்த அனிமேஷன் படமாக நான் இதை கருதுகிறேன்..
மனிதர்களால் இப்படி கற்பனை செய்ய முடியுமா.. என்பது போல அமைந்த காட்சிகள் ஏறாளமாய் உள்ளன... இதனை குழந்தைகள்... தங்கள்
தலைமுறையின் "Star Wars" என்று நிச்சயம் கருதுவார்கள்..
ஆயிரத்தில் ஒருவன் கதையில் எம்.ஜி.ஆர் ஒரு தனி நாட்டிற்காக போராடினால் எப்படி இருந்திருக்கோம் அது போல வீர வசனம் பேசி தலைவர் மகளை காதலித்து, பின் தன்னை ஏற்ற மக்களுக்காக போராடும் நம் கதாநாயகன்...அவதார் .. நிஜ(மனித) முகம் மறந்து போவது என்பது உறுதி..
கூகுள் செய்து பார்த்தில்.. இவர் நடத்தி சில படங்கள் நமக்கு தெரியவந்தது...அனிமேஷனுக்கு முக்கியதுவம் உள்ள இப்படத்தில் மனித முகங்கள் தங்கள் தீய குணம் காட்ட மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன..
படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணம் இரண்டு பேர் - ஜான் லாண்டோ , ஜேம்ஸ் காமரூன்
இப்படம் எடுத்த முறையே (Virtual Production) திரைப்பட வரலாற்றை மாற்ற வாய்ப்புகள் உண்டு..
இதை பற்றி இதன் தயாரிப்பாளர் கூறியது .. கீழுள்ள காணொளியில் உள்ளது..
ஜேம்ஸ் காமரூன் - எழுதிய , இயக்கிய இப்படம் அவரின் டைடானிக் சாதனையை முறியடிக்கும்..
இந்த மனிதரை பாராட்ட வேண்டியது கதைகாக அல்ல... எடுத்துக்கொண்ட கதையை எந்த முறையில் கற்பனை செய்த விதத்துக்காக.. இப்படியும் யோசிக்க முடியுமா நம்மை ஆச்சரிய பட வைப்பதற்காக... மனிதனின் கற்பனை எல்லையை மேலும் ஒரு 100 மைல்கள் உயர்த்தியதற்காக..இந்த வருடத்தின் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை (கோல்டன் குலோப்) இவர் வாங்கப்போவது உறுதி!! குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!!
பல 3D படங்கள் இதற்கு முன் பார்த்ததுண்டு.. ஆனால் இம்முறை நான் பார்த்தது.. என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தது..
இப்படத்தை குழந்தைகளுடன் சென்று 3Dயில் பார்க்குமாறு பரிந்துரைப்பேன்
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 19 டிசம்பர், 2009
வெள்ளி, 13 நவம்பர், 2009
தமிழ் சினிமாவும் டாக்டர் பட்டங்களும்!
இந்த தனியார் பல்கலைகழகங்கள்... செய்யும் லொல்லுக்கு அளவே இல்லை.....
ஒவ்வொரு வருடமும் .. சில சினிமா நட்சத்திரங்களுக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் தருவதையே தலையாய கடமையாக கொண்டுள்ளன..
இவர்களை விட்டால்.. நாட்டில் ஆளே கிடையாது என்ன??
ஜந்து வயது முதல் நடித்து வரும் கமலஹாசன்....
நடிக்கவே தெரியாத உருப்படாத இளைய தளபதி...
ஜொல்லு லொல்லு என்று நடித்து பின் பெரியாராக பெண்ணியம் பேசிய சத்யராஜ்..
தன் வாழ்நாளில்... காப்பியடிக்காமல் பாடல் இசையமைத்திடாத தேவா
இவர்கள் பட்டியலில்... இன்று...
சரத்குமார்... இன்னும் நடித்து நம்மை கொல்வதற்கான காரணகர்தா.. கே.எஸ்.ரவிக்குமாரும் சேர்ந்துக்கொண்டார்....
சினிமா கலைஞர்களை தவிர.. தமிழ் நாட்டில்.. கலைஞர்கள் யாரும் இல்லையா என்ன??
இவர்கள் தான் தமிழ் கலைகளின் உண்மையான பாதுகாவலர்களா...??
சினிமா கலைஞர்களுக்கு விருதளிப்பது தவறு என்று சொல்லவில்லை... ஆனால் தகுதியானவர்களுக்கு தாருங்கள் என்பதே என் வாதம்...
ஒரு முறை சினிமா கலைஞர்களுக்கும்... பின் தமிழ் கலைகளை இன்றும்... வறுமையில் இருந்து கொண்டு வாழவைத்துக்கொண்டிருக்கும்...ஏழை கலைஞர்களுக்கு தரலாம்...
இன்று நம் நாட்டில்... மிக தேவையானவர்கள் ..
இளங்ஞர்களுக்கு முன்மாதிரியாக(Role Models).. இருக்கும் மனிதர்களே..
இவர்களை நாம் இன்னமும்.. திரைப்படங்களில் தேடுவது.. தான் நம் நாட்டின் மிக பெரிய.. சாபக்கேடு...
இன்றும்.. எந்த பலனும் கருதாமல் அமைதியாக கலை, கலாச்சாரம் பாதுகாத்து வரும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
இவர்களை நாம் கண்டு கொள்ளவில்லையென்றால்...
எங்கும் தற்பெருமை, சுயநலம் கொண்ட சமுதாயமே அமையும் ..........

லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சினிமா,
டாக்டர்,
தமிழ்,
பட்டம்,
Actors,
Doctorate,
Kanavil Nijam,
Tamil
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)