வெள்ளி, 31 டிசம்பர், 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புது வருடம் ..... 2011
புதிய தினங்கள்...
புதிய சிந்தனைகள்.....
புதிய தேடல்கள்....
புதிய முயற்சிகள்.....
புதிய அனுபவங்கள்.....
புதிய வெற்றிகள்...

உங்கள் வாழ்வில் மலர ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

வியாழன், 23 டிசம்பர், 2010

மீண்டும் வெங்காயம்

வெங்காய விலை பற்றி பெரியாரிடம் தான் கேட்க வேண்டும்: கருணாநிதி

வெங்காயத்தின் ஏற்றத்தால்... மட்டுமே
பெரியாரை நினைவுகோரும் கருணாநிதி...

:-D

இது ...பிரென்ச் புரட்சிக்கு முன் ராணி மேரி..
"பிரெட் இல்லையென்றால் கேக் சாப்பிடட்டும்" .. என்றது போல் உள்ளது..

ஆனால்

இலவச டி.வி , அரிசி , ஓயின் ஷாப் மற்றும் ஓட்டு போட பணம் இருக்கும் வரை ...
தமிழகமும் / தமிழர்களும் புரட்சி புஸ்வானங்கள் தான் :-)
  

புதன், 22 டிசம்பர், 2010

வெங்காயம்

"போடா வெங்காயம்"
என்று எள்ளி நகையாடினர்...

"முடிந்தால் என்னை ருசித்துப்பார்"
என்று.. வெங்காயம்... உயர பறந்தது...

:-D


வெங்காயம் - கிலோ ரூ.100 - மக்கள் அவதி!



புதன், 8 டிசம்பர், 2010

மெளனம்


எதையும் தாங்கும் இதயம் ...
உன் மெளனத்தின் பாரத்தால் நொறுங்கும்..வரை.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

உடல் உயிர்



உடல் - உயிர் இதில் நிஜம் எது?
உடலின்றி உயிரின் பலன் என்ன?
உயிரின்றி உடலின் பொருள் என்ன்?

சில நாட்கள்..
உடல்களின் துணை மட்டும்..நிஜம்
சில நாட்கள்..
உயிர் மேல் ஆசை மட்டுமே ... நிஜம்
பல நாட்கள்..
உடல் - உயிர் மறப்போம்

வாழ்க்கையெனும் கனவில்..

சனி, 10 ஜூலை, 2010

சரி... நீங்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?

Pakistan suicide blasts in Mohmand 'kill more than 100'
Iraq suicide bomb attack kills five
8 injured in train derailment following blast in NE India

மேல் உள்ள தலைப்பு செய்திகளில் ஓர் ஒற்றுமை - இவையாவிலும் பலியானவர்கள் எல்லோரும் உன்னை - என்னை போன்ற...சராசரி மனிதர்கள்.

ஓர் சராசரி மனிதனின் உயிரை கொன்று இவர்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?
அரசாங்கத்தை / அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் ஏன் சராசரி மனிதனே பலியாகிறான்?

சராசரி மனிதனின் உயிரை ஓட்டு எண்ணிக்கையாக மட்டும் கருதும் அரசாங்கத்தின் / அரசியல்வாதிகளின் மனதில் இந்த உயிர் பலிகள் என்ன மாற்றத்தை கொண்டு வரப்போவதாக எண்ணுகிறார்க்ள்??

முகம் தெரியாத அரசாங்கம்
பல முகங்கள் கொண்ட "இவர்கள்"
நடுவில்..
முகம் தெரியாதவனின் அக்கறையின்மையில்..
தினம் தினம் "இவர்களின்" பயத்தில்..
கல்லறையை நோக்கி எனது தின வாழ்க்கை...
நான் ஒரு சராசரி மனிதன்..

ஞாயிறு, 20 ஜூன், 2010

தோல்வி நிலையென நினைத்தால்...



தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடிந்தும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்...
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் விடிந்தும்
மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்...
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்..
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்..
கொள்கை சாகலாமா?

புதன், 13 ஜனவரி, 2010

சேவல்!!

சேவல்!!


செவ்வாய், 12 ஜனவரி, 2010

கோபம் ஊடல் காதல்

கோபம்


















கொஞ்சம் கோபம் ,
கொஞ்சம் முனங்கல்,
உதட்டோரம் மெல்லிய புன்னகை...
என்னை பார்த்தவுடன்....

ஊடல்



















உன்னிடம் பேச தவறிய இன்று உணர்ந்தேன்..
நீ என்னுள் முழுதாய் நிறைந்திருப்பதை.

நான் பேச தவறியது - சில நொடிகள்.
உன் நினைப்பை சுமந்தேன் - நாள் முழுதும்

காதல்


நான் கேட்கக்கூடாது
ஆனால் சொல்லவும் மாட்டாள்
நான் கேட்கமாட்டேன் என்றால்
ஏன் கேட்கமாட்டாய் என்பாள்,
சரி, சொல் என்றால்,
நான் உன்னிடம் சொல்லமுடியாது என்பாள்..

சொல்லாமல் சொல்லினாள் - காதல்!

வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஓரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது

புதுப்பேட்டை!!
It all comes down to this!!
யுவனின் சிறந்த இசையில் நா.முத்துக்குமாரின் அற்புதமான வரிகள்!






ஓரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது..
மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது,
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்..
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்!!
ஓ! ஓ! ஓ!
கருவாசல் விட்ட வந்த நாள் தொட்டு,
ஓ! ஓ! ஓ!
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓ! ஓ! ஓ!
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓ! ஓ! ஓ!
கண் மூடிக்கொண்டால்..

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்.

தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எறிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..
ஓ! ஓ! ஓ!
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓ! ஓ! ஓ!
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓ! ஓ! ஓ!
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஓ! ஓ! ஓ!
அந்த கடவுளை கண்டால்...

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் எனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம்..
ஓ! ஓ! ஓ!
பல முகங்கள் வேண்டும், சரி மாட்டிக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
பல திருப்பம் தெரியும் , அதில் திரும்பிக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
கதை முடியும் போக்கில், அதை முடித்துக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
மறுபிறவி வேண்டுமா??

நிலா சிறுவன் - குறும்படம்

நிலா சிறுவன் - குறும்படம்
ஆடம் கால்பி


ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கோப்பையிலே புத்தாண்டு - சீரழியாதே தமிழா!!

புத்தாண்டு மற்றும் பிற விழா நாட்கள் என்றால் தமிழனுக்கு இப்போது தெரிந்த இரண்டே விஷயங்கள்

"சூப்பர் ஹிட் திரைப்படம்"
"குவாட்டர் பாட்டில்"

தமிழ் இனத்தையே சினிமா மோகம் - சிரிப்பு அலைவரிசைகள் -மெகா சீரியல் - என்ற ஒரு மாய வலையில் சிக்க வைத்துள்ள தொலைக்காட்சிகள் ஒரு புறம்.

தன் இனம் அழிவதை கூட அறியாமல் இலவச கலர் டி.வி பெற்று, சூப்பர் ஹிட் படங்களை பார்த்து பண்டிகைகளை கொண்டாடி... பண்டிக்களின் சிறப்பினை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ...   "தமிழன்" என்ற அடையாளம் தொலைத்து வரும் போற்றத்தகு தமிழர் நாம்..

இவை போததென்று பெருகி வரும் "ஒயின் ஷாப்" தொல்லைகள்!
ஒயின் ஷாப் - அரசியல் கட்சியனர்,  கட்ட பஞ்சாயத்து, ஏலத்திற்கான லஞ்சம் , குடிப்போரை ஏமாற்றும் வேய்டர்கள்,  போலீஸை ஏமாற்றும் குடிமகன்கள் ,ஒயின் ஷாப்பை ஏய்க்கும் போலீஸ்,  பெற்றோரை ஏமாற்றும் மகன்கள்,  குடும்பத்தை ஏமாற்றும் தந்தைமார்கள்... என்று ஒரு பெரிய தொடர்பு உள்ளது...

குடிப்பது தவறில்லை,
நாம் குடிப்பது அடுத்தவரை உடல் அளவிலும்/ மனதளவிலும் தாக்காத வரை..

இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நம் குடிமகன்கள் செய்த சில அரிய செயல்கள் கீழே பார்க்கலாம் :
Spate of accidents on New Year eve


5 die, 140 hurt on new year eve

சென்னையில் மட்டும் - 140 பேர் , 5 பேர் பலி - இன்னும் எத்தனை பேர் இதனால் மறைமுகமாக அவதி படுகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்...

இறந்தவர்கள் அணைவரும் 25 வயதிற்கு உட்பட்டோர்.

கனவுகளையும் , சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டிய வயதில்,
மது தரும் போதையையே சந்தோஷமாக நினைத்து..
உயிரை ரோட்டொரங்களில் விடுவதையே தங்கள் கடமையாக கொண்ட இவர்களின் வீரத்தை என்ன வென்று சொல்வது...

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே..
மக்களை கொன்றிடும் மதுவை விற்பது இதை விட பெரும் கொடுமை...

டாஸ்மாக்கில் 'களைகட்டிய' புத்தாண்டு! - 47 கோடி விற்பனை


டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி

இவர்களுக்கு விஷம் அதிக வருவாய் தருமாயின், அதையும் மக்களுக்காக விற்க தயாராக உள்ளவர் தான்!!

ஓர் சிறு குறிப்பு : இலங்கையில் ஒதுங்கிட ஓர் இடமின்றி தவிக்கும் நம் தமிழருக்கு நம் மாநில கட்சிகள் , தமிழ் நாட்டு மக்கள், தொண்டு நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து அளித்த தொகை ஒயின் ஷாப் விற்பனையை விட குறைவு தான்.!!

ஆரோகியமற்ற சமுதாயத்தால் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணர வேண்டும்...
ஒழுக்கம் என்ற சொல்லை புரிந்துக்கொள்ள வேண்டும்..

"ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்"


சுய ஒழுக்கம் அற்ற எந்த ஒரு சமுதாயமும் முன்னேறியதாக சரித்திரமில்லை.


இதை நம் தமிழினம் நன்கு உணர வேண்டும்...
இந்த அவலத்தை போக்க சில யோசனைகள்:

1) நான் என்றுமே ஏற்க மறுத்த இந்து முன்னணி கட்சி கூட , இந்த விஷயத்தில் சொன்ன கருத்தை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்..

புத்தாண்டில் மதுக்கடைகளை மூடவேண்டும் - இந்து முன்னணி



2) சினிமா, தொலைக்காட்சி வரும் காமெடியன் முதல் கதாநாயகன் வரை பீர் குடிப்பதை .. மோர் குடிப்பதற்கு ஒப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளது..  வயதிற்கேற்ற குறிபேடுகள் இல்லாத நம் ஊடகங்களில்.. இதை குழந்தைகளும் , இளைஞர்களும் கண்டு நகைச்சுவையாக எடுத்து கொள்வது மேலும் ஒரு அவலம்...

இதை நிறுத்த எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்யவேண்டும்.  மது அருந்துவதையும் , புகை பிடிப்பதையும் கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் / படங்களுக்கும் "A" சர்டிபிகெட் தர வேண்டும்

3) அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் ...

ஆரோக்கியமான மக்களே அரசின் உண்மையான சொத்து என்பதை உணர வேண்டும்..

4) ஒயின் ஷாப்பில் அமர்ந்து குடிப்பதற்கான வசதியை ரத்து செய்ய வேண்டும்.
பொது இடங்களில் குடிப்பதையும் தண்டனைக் உட்படுத்த / செயல்படுத்த வேண்டும்.. வீட்டிற்கு சென்று குடிப்பதையே வலியுறுத்த வேண்டும்.. அப்படி குடிக்க முடியாதவர்கள் குடிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்.

 5) இது அணைத்தும் கடினமாக இருப்பின் - சென்னை நகரின் ஒரு பகுதியை -  "கேளிக்கை நகரமாக்கி" - மற்ற பகுதிகளில் மது கடைகளை மூட வேண்டும்... இதனால் மத்த பகுதிகளில் உள்ள குழந்தைகளும் , பெண்களும் எந்த பயமும் இன்றி ரோட்டில் நடந்து செல்ல முடியும்...

போதையில் - மாயையில் உள்ள தமிழன் விழித்திட வேண்டும்!!

சனி, 2 ஜனவரி, 2010

தலைப்பு செய்தி

இன்று தினத் தந்தி படித்த போத தோன்றியது..


பஸ் உரசியதால்
தீபெட்டி லாரி எரிந்தது

2 பேர் பலி - வெட்கமும் , வார்த்தைகளும் !!

நான் பஸ்
அவள் லாரி


வெள்ளி, 1 ஜனவரி, 2010

புத்தாண்டு

புத்தாண்டு குறித்து நான் வெகு நாட்களுக்கு முன் எழுதியது

புத்தாண்டு 
வாழ வழி கிடைத்திட,
வாழ்க்கைத்தனை வென்றிட,
வாட்டத்தை போக்கிட,
ஓட்டத்தை துவங்கிட,
மோதல் குறைந்திட,
காதல் இனித்திட,
தடைகள் உடைத்திட,
கனவு நிஜமாக்கிட,

இன்று முதல்...365 புதிய நாட்கள்...
உனக்காக!!!

புத்தாண்டு


புத்தாண்டு
நாட்காட்டியின் கடைசி பக்கத்தின்
மறைவில் - புத்தாண்டு!!

புத்தாண்டு
வருடங்களுக்கிடையே..
பறந்து செல்லும் நாட்கள்
கனவு கண்டு தனி உலகம் படைத்திட..

புத்தாண்டு - ஒரு புதிய தனி உலகம்...
என்னுள்.!!


புத்தாண்டு
தினம் கழியும்
நாட்களை எண்ணி பார்க்காமல்..
கழிந்த வருடங்களை
மட்டும் எண்ணி பார்க்கும் மனிதர்கள் நாம்..
ஒவ்வொறு தினத்தையும்,
புது வருடமாக எண்ணி பார்..
அப்பொழுது புரியும்,
நாட்களின் அருமை
வாழ்க்கையின் உண்மை!!

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து




''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

நன்றி .. ஆனந்த விகடன்

"காதல் கதை" - வேலு பிராபாகரன் சுய புராணம்

காதல் கதை - பாகம் 2 வெளியாகியுள்ளதா என்று நீங்கள் சந்தேகம் கொள்ளும் முன்பு,
சில மாதங்களுக்கு முன் வெளி வந்த "காதல் கதை" படம் தான் இது..
இப்போது தான் நேரம் கிடைத்து... பார்க்க நேர்ந்தது.

இப்படம் வேலு பிராபாகரனின் சுய புராணம் போல் இருந்தாலும்..
சில இடங்களில்..
"மச்சான்.. நீ என்ன தான் சொல்ல வர" என்று கேட்க தோன்றினாலும்..
பல இடங்களில் ..
"பெண்களின் மேல் இருக்கும் மோகம் தீர்க்க பெண்களின் உடலை முழுமயாக காட்ட முயிற்சிருந்தாலும்.." (என்று வேலு பிராபாகரன் கூறுகிறார்)
சில இடங்களில்..
"காமம் மட்டுமே உண்மை" என்று அவரின் அனுபவத்தை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டாலும்..

இப்படத்தில் தென்பட்ட நல்லவை சில

அ)காட்சிகளின் எதார்த்தம் - சுப்பிரமணியபுரம், ரேனிகுண்டா, பசங்க, போன்ற படங்களை எதோ இயக்குனர் சங்கர் படங்கள் போல் தோன்ற வைப்பது உறுதி..
இக்கருத்தை எனது பல நண்பர்கள் மறுத்து - இப்படம் "அமெச்சூராக இருந்தது என்று கூறுகின்றனர்.

ஆ)நீங்கள் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் படத்தின் முதல் பத்து நிமிடங்களில் வேலு பிராபாகரன் கேட்கும் கேள்விகள் நியாயமான கருத்தாகவே தோன்றும்.. உங்களை யோசிக்க தூண்டும்..

இ)படத்தில் நாம் பார்க்கும் முகங்கள் அணைத்தும் (2-3 தவிர்த்து) புது முகங்கள் , இருப்பினும் அவர்களின் நடிப்பு மிக நேர்த்தியாக உள்ளது.. எந்த ஒரு காட்சியிலும் விஜய் படத்தில் "இப்படி எவனாவது செய்வானா" என்று நாம் கேட்கும் கேள்வியினை இப்படத்தில் நம்மால் கேட்ட முடிவதில்லை..(வே.பி வரும் காட்சிகளை தவிர)

ஈ)பெண்களை அழகு பொருட்களாக பயன்படுத்திடும் தமிழ் படங்களின் நடுவே, பெண்களும் மனிதர்கள் தான் என்ற இப்படத்தின் கருத்து (பல கருத்தில் இதுவும் ஒன்று) தனித்து நின்றாலும்.. அக்கருத்தை இப்படத்தில் வெளிபடுத்திய விதம் தான், இப்படத்தையும் குப்பையான பிற தமிழ் படங்களுடன் சேர்த்துவிடுகிறது.

மற்றபடி இப்படத்தை பற்றி சில குறிப்புகள்,

இப்படத்தில் வரும் அணைத்து பெண்களும் படுக்க தயார் நிலையிலே உள்ளனர்..

பெண்ணின் மார்பை பற்றி ஆவேசமாக வசனம் பேசும் வே.பி கூட அதே மார்பங்களை காட்டியே ஆண்களை திருத்த நினைப்பது காமடியாக உள்ளது.

பெண்களின் நிலை பற்றி பேசும் படத்தில் ஓர் பெண்ணையும் உயர்வு படுத்தி காட்டாதது.. வே.பி யை படத்தில் வரும் ஆசிரியருக்கு ஓப்பிடலாம்.

இப்படம் எடுக்கப்பட்ட/விவாதிக்கப்பட்ட வருடங்களில் வே.பி படத்தின் கதையை முற்றிலும் மறந்து விட்டது பல காட்சிகளில் தெரிகிறது.

அவர் சொல்ல வந்தது - பெண்களின் அவல நிலையையா? அல்ல ஆண்களின் காம வெறியையா? அல்ல கடவுள் இல்லை என்ற கருத்தையா? அல்ல ஜாதி இல்லை என்ற கருத்தையா? அல்ல அவரின் சுய புராணத்தையா?? - வே.பியின் குழப்பத்தில் நாமும் குழம்பி போகிறோம?

கதைகள் சொல்ல ஆயிரம் வழிகள் உண்டு..
ஆனால் கருத்து நல்லதாக இருப்பினும்
கதை சொன்ன விதம் முற்றிலும் எதிர்மறையாக உள்ளது..
"காதல் கதை"யில்..

இப்படத்தில் இடம் பெற்ற சில கேள்விகள்:

1) நம் நாட்டில் நூறு கோடி மனிதர்கள் இருந்தும் , உலக மக்கள் அணைவராலும் பயன்படுத்தப்படும் எந்த ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பையும் நிகழ்த்தாது ஏன்??

2) பெண் தெய்வங்களை அதிக அளவில் கும்பிடும் நம் நாட்டில், அதிக அளவில் கற்பழிப்பு நடப்பது ஏன்?

3) ஜாதி பாகுபாடு இன்றி எல்லா ஜாதியிலும் பெண்ணை ஆண் அடிமை படுத்துவது ஏன்?

4) கலவி பற்றி பேச மறுக்கும் நாட்டில் அதிகப்படியாக இணையத்தில் கலவி தேடுவது எதனால்?

5) நம் உடம்பின் மேல் நமக்கு ஏன் இந்த தாழ்வான எண்ணம்?? சிறு வயதிலிருந்தே நம் மனதில் இதை விதைப்பது ஏன்?

6) கலவி கடவுளுக்கு எதிரானதாக கருதப்படுவது ஏன்?

7) உயிரினங்கள் எல்லாவற்றைப்போல நமக்கும் கலவி பற்றி தோன்றுவது இயற்கை என்றால்? அதை மனிதன் ஏற்க நினைப்பது ஏன்?

8) மேலை நாடுகளில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூறும் வே.பி, அங்கு நடக்கும் பாலியில் கொடுமைகளையும் கணக்கில் கொண்டு பேசவேண்டும்.


வே.பி கடவுள் இல்லை, ஜாதி இல்லை, காதல் இல்லை என்று சொல்லி படம் எடுத்தாயிற்று... அடுத்து என்ன படம் எடுப்பார். என்பது அவருக்கே வெளிச்சம்..

அடுத்த படம் ............"மனிதனே இல்லை" ;-)