கோபம்
கொஞ்சம் கோபம் ,
கொஞ்சம் முனங்கல்,
உதட்டோரம் மெல்லிய புன்னகை...
என்னை பார்த்தவுடன்....
ஊடல்
உன்னிடம் பேச தவறிய இன்று உணர்ந்தேன்..
நீ என்னுள் முழுதாய் நிறைந்திருப்பதை.
நான் பேச தவறியது - சில நொடிகள்.
உன் நினைப்பை சுமந்தேன் - நாள் முழுதும்
காதல்
நான் கேட்கக்கூடாது
ஆனால் சொல்லவும் மாட்டாள்
நான் கேட்கமாட்டேன் என்றால்
ஏன் கேட்கமாட்டாய் என்பாள்,
சரி, சொல் என்றால்,
நான் உன்னிடம் சொல்லமுடியாது என்பாள்..
சொல்லாமல் சொல்லினாள் - காதல்!
செவ்வாய், 12 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக