Anger லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Anger லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கோபம் ஊடல் காதல்

கோபம்


















கொஞ்சம் கோபம் ,
கொஞ்சம் முனங்கல்,
உதட்டோரம் மெல்லிய புன்னகை...
என்னை பார்த்தவுடன்....

ஊடல்



















உன்னிடம் பேச தவறிய இன்று உணர்ந்தேன்..
நீ என்னுள் முழுதாய் நிறைந்திருப்பதை.

நான் பேச தவறியது - சில நொடிகள்.
உன் நினைப்பை சுமந்தேன் - நாள் முழுதும்

காதல்


நான் கேட்கக்கூடாது
ஆனால் சொல்லவும் மாட்டாள்
நான் கேட்கமாட்டேன் என்றால்
ஏன் கேட்கமாட்டாய் என்பாள்,
சரி, சொல் என்றால்,
நான் உன்னிடம் சொல்லமுடியாது என்பாள்..

சொல்லாமல் சொல்லினாள் - காதல்!

வியாழன், 29 அக்டோபர், 2009

கோபம்



கண்கள் சிவந்திட,
நரம்பு புடைத்திட,
மெளனம் சிதரிட..
வார்த்தைகளின் மழை
கோபம்



கோபம் -
எண்ணம்,
கனவு,
சிந்தனை,
பழிவாங்கிட மட்டுமே!!