ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கோப்பையிலே புத்தாண்டு - சீரழியாதே தமிழா!!

புத்தாண்டு மற்றும் பிற விழா நாட்கள் என்றால் தமிழனுக்கு இப்போது தெரிந்த இரண்டே விஷயங்கள்

"சூப்பர் ஹிட் திரைப்படம்"
"குவாட்டர் பாட்டில்"

தமிழ் இனத்தையே சினிமா மோகம் - சிரிப்பு அலைவரிசைகள் -மெகா சீரியல் - என்ற ஒரு மாய வலையில் சிக்க வைத்துள்ள தொலைக்காட்சிகள் ஒரு புறம்.

தன் இனம் அழிவதை கூட அறியாமல் இலவச கலர் டி.வி பெற்று, சூப்பர் ஹிட் படங்களை பார்த்து பண்டிகைகளை கொண்டாடி... பண்டிக்களின் சிறப்பினை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ...   "தமிழன்" என்ற அடையாளம் தொலைத்து வரும் போற்றத்தகு தமிழர் நாம்..

இவை போததென்று பெருகி வரும் "ஒயின் ஷாப்" தொல்லைகள்!
ஒயின் ஷாப் - அரசியல் கட்சியனர்,  கட்ட பஞ்சாயத்து, ஏலத்திற்கான லஞ்சம் , குடிப்போரை ஏமாற்றும் வேய்டர்கள்,  போலீஸை ஏமாற்றும் குடிமகன்கள் ,ஒயின் ஷாப்பை ஏய்க்கும் போலீஸ்,  பெற்றோரை ஏமாற்றும் மகன்கள்,  குடும்பத்தை ஏமாற்றும் தந்தைமார்கள்... என்று ஒரு பெரிய தொடர்பு உள்ளது...

குடிப்பது தவறில்லை,
நாம் குடிப்பது அடுத்தவரை உடல் அளவிலும்/ மனதளவிலும் தாக்காத வரை..

இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நம் குடிமகன்கள் செய்த சில அரிய செயல்கள் கீழே பார்க்கலாம் :
Spate of accidents on New Year eve


5 die, 140 hurt on new year eve

சென்னையில் மட்டும் - 140 பேர் , 5 பேர் பலி - இன்னும் எத்தனை பேர் இதனால் மறைமுகமாக அவதி படுகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்...

இறந்தவர்கள் அணைவரும் 25 வயதிற்கு உட்பட்டோர்.

கனவுகளையும் , சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டிய வயதில்,
மது தரும் போதையையே சந்தோஷமாக நினைத்து..
உயிரை ரோட்டொரங்களில் விடுவதையே தங்கள் கடமையாக கொண்ட இவர்களின் வீரத்தை என்ன வென்று சொல்வது...

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே..
மக்களை கொன்றிடும் மதுவை விற்பது இதை விட பெரும் கொடுமை...

டாஸ்மாக்கில் 'களைகட்டிய' புத்தாண்டு! - 47 கோடி விற்பனை


டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி

இவர்களுக்கு விஷம் அதிக வருவாய் தருமாயின், அதையும் மக்களுக்காக விற்க தயாராக உள்ளவர் தான்!!

ஓர் சிறு குறிப்பு : இலங்கையில் ஒதுங்கிட ஓர் இடமின்றி தவிக்கும் நம் தமிழருக்கு நம் மாநில கட்சிகள் , தமிழ் நாட்டு மக்கள், தொண்டு நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து அளித்த தொகை ஒயின் ஷாப் விற்பனையை விட குறைவு தான்.!!

ஆரோகியமற்ற சமுதாயத்தால் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணர வேண்டும்...
ஒழுக்கம் என்ற சொல்லை புரிந்துக்கொள்ள வேண்டும்..

"ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்"


சுய ஒழுக்கம் அற்ற எந்த ஒரு சமுதாயமும் முன்னேறியதாக சரித்திரமில்லை.


இதை நம் தமிழினம் நன்கு உணர வேண்டும்...
இந்த அவலத்தை போக்க சில யோசனைகள்:

1) நான் என்றுமே ஏற்க மறுத்த இந்து முன்னணி கட்சி கூட , இந்த விஷயத்தில் சொன்ன கருத்தை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்..

புத்தாண்டில் மதுக்கடைகளை மூடவேண்டும் - இந்து முன்னணி



2) சினிமா, தொலைக்காட்சி வரும் காமெடியன் முதல் கதாநாயகன் வரை பீர் குடிப்பதை .. மோர் குடிப்பதற்கு ஒப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளது..  வயதிற்கேற்ற குறிபேடுகள் இல்லாத நம் ஊடகங்களில்.. இதை குழந்தைகளும் , இளைஞர்களும் கண்டு நகைச்சுவையாக எடுத்து கொள்வது மேலும் ஒரு அவலம்...

இதை நிறுத்த எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்யவேண்டும்.  மது அருந்துவதையும் , புகை பிடிப்பதையும் கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் / படங்களுக்கும் "A" சர்டிபிகெட் தர வேண்டும்

3) அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் ...

ஆரோக்கியமான மக்களே அரசின் உண்மையான சொத்து என்பதை உணர வேண்டும்..

4) ஒயின் ஷாப்பில் அமர்ந்து குடிப்பதற்கான வசதியை ரத்து செய்ய வேண்டும்.
பொது இடங்களில் குடிப்பதையும் தண்டனைக் உட்படுத்த / செயல்படுத்த வேண்டும்.. வீட்டிற்கு சென்று குடிப்பதையே வலியுறுத்த வேண்டும்.. அப்படி குடிக்க முடியாதவர்கள் குடிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்.

 5) இது அணைத்தும் கடினமாக இருப்பின் - சென்னை நகரின் ஒரு பகுதியை -  "கேளிக்கை நகரமாக்கி" - மற்ற பகுதிகளில் மது கடைகளை மூட வேண்டும்... இதனால் மத்த பகுதிகளில் உள்ள குழந்தைகளும் , பெண்களும் எந்த பயமும் இன்றி ரோட்டில் நடந்து செல்ல முடியும்...

போதையில் - மாயையில் உள்ள தமிழன் விழித்திட வேண்டும்!!

1 கருத்து: