வெள்ளி, 13 நவம்பர், 2009

தமிழ் சினிமாவும் டாக்டர் பட்டங்களும்!

இந்த தனியார் பல்கலைகழகங்கள்... செய்யும் லொல்லுக்கு அளவே இல்லை.....

ஒவ்வொரு வருடமும் .. சில சினிமா நட்சத்திரங்களுக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் தருவதையே தலையாய கடமையாக கொண்டுள்ளன..

இவர்களை விட்டால்.. நாட்டில் ஆளே கிடையாது என்ன??

ஜந்து வயது முதல் நடித்து வரும் கமலஹாசன்....
நடிக்கவே தெரியாத  உருப்படாத இளைய தளபதி...  
ஜொல்லு லொல்லு என்று நடித்து பின் பெரியாராக பெண்ணியம் பேசிய சத்யராஜ்..
தன் வாழ்நாளில்... காப்பியடிக்காமல் பாடல் இசையமைத்திடாத தேவா 

இவர்கள் பட்டியலில்... இன்று...

சரத்குமார்... இன்னும் நடித்து  நம்மை கொல்வதற்கான காரணகர்தா.. கே.எஸ்.ரவிக்குமாரும் சேர்ந்துக்கொண்டார்....

சினிமா கலைஞர்களை தவிர.. தமிழ் நாட்டில்.. கலைஞர்கள் யாரும் இல்லையா என்ன??

இவர்கள் தான் தமிழ் கலைகளின் உண்மையான பாதுகாவலர்களா...??

சினிமா கலைஞர்களுக்கு விருதளிப்பது தவறு என்று சொல்லவில்லை... ஆனால் தகுதியானவர்களுக்கு தாருங்கள் என்பதே என் வாதம்...

ஒரு முறை சினிமா கலைஞர்களுக்கும்... பின் தமிழ் கலைகளை இன்றும்... வறுமையில் இருந்து கொண்டு வாழவைத்துக்கொண்டிருக்கும்...ஏழை கலைஞர்களுக்கு தரலாம்...

இன்று நம் நாட்டில்... மிக தேவையானவர்கள் ..
இளங்ஞர்களுக்கு முன்மாதிரியாக(Role Models).. இருக்கும் மனிதர்களே..
இவர்களை நாம் இன்னமும்.. திரைப்படங்களில் தேடுவது.. தான் நம் நாட்டின் மிக பெரிய.. சாபக்கேடு...

இன்றும்.. எந்த பலனும் கருதாமல் அமைதியாக கலை, கலாச்சாரம் பாதுகாத்து வரும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
இவர்களை நாம் கண்டு கொள்ளவில்லையென்றால்...
எங்கும் தற்பெருமை, சுயநலம் கொண்ட சமுதாயமே அமையும் ..........

3 கருத்துகள்:

  1. சூப்பர் நெத்தியடி நண்பரே ! இதில் கமலகாசனும் இளயராஜாவும் தகுதி ஆனவர்கள் தான் ....யோசித்து எழுதுங்க நண்பரே !

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் ஒரு விளம்பர உக்தி தான் ......

    பதிலளிநீக்கு
  3. சரியாச்சொன்னீங்க.. சினிமா நடிர்கள்னா இவிங்களுக்கு கடவுளின் மறுஉருவங்கள்.

    நானும் இதைப்பத்திபோட்டிருக்கேன்... பாருங்க...

    http://vimarsagan1.blogspot.com/2009/09/blog-post_20.html

    பதிலளிநீக்கு