இன்று நிலவில் தண்ணீர் கண்டுபிடிக்கும் அளவு செல்ல ஓரே காரணம்..
மாற்றம்
மனித இனத்தின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும்... மனிதன் தனது இன்றைய நிலையிலிருந்து வேறு நிலை அடைய நினைக்கும் - "மாற்றமே" எந்நேரத்திலும் காரணமாக இருப்பதை நாம் உணரலாம்...
இந்த நூற்றாண்டில் மட்டும் மனித இனத்தின் வளர்ச்சி (மாற்றம்) மிகவும் பிரமிக்கவைக்கிறது...
கிட்டதட்ட எல்லா துறைகளிலும் மாற்றம் கண்ட மனிதன்...
கடவுளில் மட்டும் மாற்றம் விரும்பாமல் இருப்பது ஏன்??
இந்து கடவுள்களான .. .
பிரம்மா, விஷ்ணு,சிவன்,பிள்ளையார்,முருகன், பார்வதி, சரஸ்வதி,காளி,அம்மன் ... சில நூற்றாண்டுகளாகவே வணங்கப்பட்டு வருவதற்கான சான்றுகள் உள்ளன..
அதே போல் புனித மேரி,கிருஸ்து, நபிகள் நாயகம்,புத்தர் போன்ற கடவுகளும் /கடவுளின் பிரதிநிதிகளும் சில நூற்றாண்டுகளாகவே வணங்கப்பட்டு வருகின்றனர்.
நாம் சாமியார்கள் கடவுளாக வணங்கபடுவதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ...
நமது மிக இளைய கடவுளுக்கு வயது - சில நூற்றாண்டுகளாக இருக்கும்..
இது மிகவும் வியப்பாக உள்ளது..
எல்லாவற்றிலும் மாற்றம் விரும்பும் மனிதன் தனது நம்பிக்கைகளில் மட்டும் மாற்றம் விரும்பாதது ஏன்??
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்:
பெரும்பாலான கடவுள்கள் எப்போதும் புராணங்களில் இருந்தே தோன்றினர்..ஏனோ இன்றைய உலகில் புராணங்கள் யாரும் எழுதுவதில்லை... எழுதினாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடமில்லை...இதனால் புதிய கடவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை...
சாமியர்களை கடவுளாக்கி.....உலகில் தோன்றும் நிஜக்கடவுள்களை.. நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்..
"கடவுள் ஒன்று" என்று உலகம் நம்புவதால்... புதிய கடவுள் படைக்க எந்த ஒரு அவசியமும் இல்லாமல் இருக்கலாம்...
கடவுள் எல்லாம் ஏமாற்று வேலை என்று நம்பும் பகுத்தறிவு கூட்டம் அதிகமானதால்... புதிய கடவுளுக்கான எந்த எதிர்ப்பார்ப்பும் மக்களிடையே இல்லாமல் இருக்கலாம்..
தினம் தினம் புதிய கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டுகின்றன... ஆனால் அவைகள்/அவர்கள் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் கடவுளாக மாற .. வெகு காலம் (நூற்றாண்டுகள்) பிடிக்கும்... இதனால் நம்மால் புதிய கடவுள்களின் வளர்ச்சியை எளிதில் கண்டுக்கொள்ள முடியாமல் இருக்கலாம்....
நமது கடவுகள் / நம்பிக்கைகள் மாற்றும் உரிமை நம்முடையது...
அப்படி காலத்திற்கேற்ப கடவுகளை மாற்றியமைக்கும் பொருப்பும்..நம்முடையது...
கடவுளும் மாறுவார் / மாற்றப்படுவார்...
இதுவே இயற்கையின் நியதி..
கடவுள் 2.0 (GOD Redefined)
கடவுளும் (ஏ)மாறுவார் / (ஏ)மாற்றப்படுவார்...
பதிலளிநீக்குஇதுவே இயற்கையின் நியதி..அப்படித்தானே தல! :-)
please remove word verification for comments. :-)
பதிலளிநீக்குநிஜக் கடவுள்- பொய்க் கடவுள் என்று இரண்டு உண்டா? நம்மால் நிஜக் கடவுளை கண்டுணர முடிந்தால், கடவுளே தேவை இல்லை அல்லவா?
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குplease remove word verification for comments. :-)
Done.
நிஜக் கடவுள்- பொய்க் கடவுள் என்று இரண்டு உண்டா? நம்மால் நிஜக் கடவுளை கண்டுணர முடிந்தால், கடவுளே தேவை இல்லை அல்லவா?
நிஜக் கடவுள்- பொய்க் கடவுள் என்று இரண்டு உண்டா?
இருக்கலாம்... :-)
நம்மால் நிஜக் கடவுளை கண்டுணர முடிந்தால், கடவுளே தேவை இல்லை அல்லவா?
ஆம்.. உண்மை தான்..