கடவுள் மனிதன் படைத்தான்?
மனிதன் கடவுள் படைத்தான்?
----------------
"நான்" கடவுள்..எனும் மனிதன்"
நான்" மனிதன்.. எனும் கடவுள்:-)
----------------
கடவுளின் பிறப்பிடம்
முதலில் தேடிய மனித மனம்..
----------------
கடவுள் படைத்தான்..
"நான்" என்றான் மனிதன்
கடவுள் மறைந்தான்..
---------------
"நான்"
மனமா?
உடலா?
கற்பனையா?
--------------
"நான்" - மாயை
"நீ" - மாயை...
நீ இன்றி நான் இல்லை - நிஜம்..
--------------
இறைவா..உனை நோக்கி நான்..
"நான்" தொலைந்த பின்..
--------------
கடவுளின் வருத்தம்
தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத
மனிதனை எண்ணி..
மனிதனின் வருத்தம்
தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத
கடவுளை எண்ணி..
---------------
புத்தகங்களில். மட்டுமே..கடவுள்
கோவில்களில். மட்டுமே..கடவுள்
புகைப்படங்களில். மட்டுமே..கடவுள்
சிலைகளில். மட்டுமே..கடவுள்
சுருக்கமாக சிறை எடுத்தான் "இல்லாத" கடவுளை ...
---------------
"நான்" , "கடவுள்" பொருளற்றவை..
"நான் கடவுள்"பொருளென்ன?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக