இன்று...மாலை இலங்கை செய்திகளைவிட..என்னை பெரிதும் பாதித்தது...
Curtain falls in Udhayam complex
"நான் ஒரு சினிமா பைத்தியம்" ... :-)இதை மனதில் வைத்துக்கொண்டு கீழ்வருபவற்றை படிக்கவும்..
25 வருடங்களாக ... கலைஞர்.கருணாநிதி நகரில் வசித்து... வந்துள்ளேன்...கடந்த சில ஆண்டுகளில் தான் - தமிழகத்தின் வெளியே சுற்றிவருகிறேன்..ஆனால் எப்போது சென்னை சென்றாலும் "உதயம்" மறக்காமல்... செல்வதுண்டு..
எனது பள்ளி படிப்பு முதல்..இன்றய நாள் வரை .. எனது பல நினைவுகள் "உதயம்" சம்மந்தப்பட்டவை...
வெள்ளி , சனி இரவுகளை வீட்டில் செலவளித்ததைவிட ..உதயத்தில்.. செலவளித்தது.. தான்.. அதிகம்..
கையில் பணம் இல்லாத சமயம் 10 ரூபாய் அனுமதிச்சீட்டில் முதல் வரிசையில் பார்த்த படங்களும் உண்டு....
அனுமதிச்சீட்டு கிடைக்காமல்... அதிக விலை கொடுத்து.. ப்ளாகில் வாங்கி பார்த்தப்படங்களும் உண்டு..
நான்கு திரையரங்களில் ஓடும் படங்களையும் பார்த்து முடித்து.. பின் வேரு வழியின்றி.. பார்த்த படத்தையே மீண்டும் பார்த்ததும்... உண்டு..
Engineering Counselling..முடித்து கல்லூரி கிடைத்த சந்தோஷத்தில்..அப்பா அம்மாவுடன்.. "சுந்தர புருஷன்" போனது.. இன்றும் நினைவில் உள்ளது..
"தளபதி"... முதல் நாள் - பார்த்த அனுபவம்.. மறக்க முடியாதது... "தளபதி" அனுமதிச்சீட்டையே... உற்றுப்பார்த்து..பரவசமடைந்ததும்.. நினைவிலுண்டு..
பசுபதிக்காக..... முதல் நாள் .. "மச்சி" படம் பார்த்த 20 நபர்களில் நானும் ஒருவன்...திரையரங்கில்.. இரு வரிசைகள் மட்டும்.. ஆட்கள்.. :-)
"ராம்" படத்தில்.. படத்தின் Producer , Director இருக்கைகளின் பின் அமர்ந்து..ஒவ்வொரு காட்சிக்கும்.. நக்கல் பண்ணியது.. காமெடி..
"கண்ணீர் பூக்கள்" என்ற.. சோகப்படத்தை... திரையரங்கிலேயே.. கத்தல்கள் மூலம்..காமெடி படமாக்கியதும்..நினைவில் உண்டு...
பிறந்த நாட்களையும்.. கொண்டாடியதுண்டு..
காதல் பிறப்பையும் கொண்டாடியதுண்டு..
காதல் முரிவையும்.. பொக்கியதுண்டு..
வாழ்க்கையின் வெருமையை நிரப்பியதுண்டு..
உதயத்தில்..படங்கள் பார்த்து...
இந்தியா.. வரும் பொழுது..
வீட்டை நெருங்கும் பொழுது..
பாரமேரும் என் மனது...
"உதயம்" நினைவுகளினால்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக