செவ்வாய், 17 மார்ச், 2009

இரக்கமற்ற எண்கள்

மருத்துவமனை மீது குண்டுவீச்சு: 11 பேர் பலி

இதை படித்த போது நான் முன்பு எழுதிய சில வரிகள் ஞாபகம் வந்தன...

"Train crash death toll rises to 71"
Zimbabwe Death Toll Rises as Human Rights Watch Blames Army

இச்செய்திகள் "மரணத்தை" மட்டும் சொல்பவையல்ல...

எண்களுக்கு நடுவே துலைந்துப்போன மனிதர்களையும் நினைவு படுத்துபவை தான்..

ஆம் ..சில நேரங்களில் ,எண்கள் சாமானிய மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை...

பெயர்களை மறைத்து,
முகங்கள் மறைத்து,
மனிதனாகிட அவன் போராடிய நாட்களை மறைத்து,
சிறிய வெற்றிகளை மறைத்து,
சின்னச் சின்ன சந்தோஷங்களை...மறைத்து,
குடும்ப சூழ்நிலை மறைத்து,
அவனை வழியனுப்பி வைத்த பிஞ்சி விரல்களை மறைத்து,
வாழ்வின் சிறிய மகிழ்ச்சிகளை மறைத்து,
வெரும் ... கருப்பு நிற மைய்யில்..,
எண்ணிக்கையின்.. ஒரு பகுதியாக்குவது,
எந்த விதத்தில்... நியாயமாகும்...

"உலகம் போரப்போக்கில்.. இது எல்லாம் சகஜமப்பா... எவனுக்கும் கவலயில்லை" என்று பலரும் சொல்லும் போது...

"சரி .. இந்த .. எண்ணிக்கையில்...உங்கள் நெருங்கிய உறவினர் அடக்கம் என்றால்..என்ன செய்வீர்கள்... " என்று கேட்டால்....

"என்ன பண்ண முடியும்... படிச்சிட்டு.. ரெண்டு துளி கண்ணீர் சிந்திட்டு....அடுத்த காரியத்தப் பார்க்க வேண்டியது தான்.." என்று பதில்...வருகிறது....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக