ஆம்!! ஜெ - கலைஞர் காமெடி தர்பார் தான் இப்போது தமிழக மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது..
செந்தில் - கவுண்டமணி கூட இவர்களுடன் போட்டியிடுவது கடினம் :-D
இவர்களுடன் கோமாளி கூட்டம் ஒன்றும் எப்போதும் போல பல காமெடிகளை செய்துக்கொண்டிருக்கிறது... அவற்றில் சிலவற்றை கீழே காணாலாம்....
மார்ச் 11,2009
காமெடி நடிகையான 'கதாநாயகி' ஜெ.- கருணாநிதி
ஒரு காமெடி நடிகரை இன்னொரு காமெடி நடிகரால் தான் புரிந்துக்கொள்ள முடியும்... :-D
நான் உண்ணாவிரதம் அறிவித்தவுடன் மருந்து பொருட்களை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியது மகிழ்ச்சி தான் - ஜெ.ஜெ
அய்யோ சாமி !! முடியல - பொய் சொல்லலாம் , ரீல் சுத்தலாம்.. ஆனா இதுக்கு பேர் தான் "டக்கால்டி" - இந்தம்மா எல்லாருக்கும் அப்புறம் உண்ணாவிரதம் வச்சிபாங்களாம்... ஆனா எதாவது நடந்தா.. என்னால.. தான்னு சொல்லுவாங்களாம்... மக்களே!! முழிச்சிக்கோங்க...
நாளை மீண்டும் 3வது அணி உதயம்-அதிமுகவும்..
உதயம் தியேட்டர் மாதிரி தான் ஆக போவுது இந்த அணியும்... ஜெ அம்மா உபஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் போது எப்படி இந்த அணிக்கு அல்வா கொடுத்தாங்களோ .. அது மாதிரி.. இன்னொரு முறையும் செய்வாங்க ....
மார்ச் 10,2009
இலங்கை தமிழர் பிரச்சனையில் முரணாக பேசுகிறார் ஜெ.:தங்கபாலு குற்றச்சாட்டு
அட சாமி!! ஜெ தான் காமெடினு நினைச்சா.. இங்க. மிஸ்டர் தங்கபாலு... காமெடி சரவெடி போடரார்....
காங்கரஸுக்கும் இலங்கை பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு புரியல..
என்ன பொருத்தவர ... இலங்கை பிரச்சனைக்கு முக்கிய காரணம் - காங்கிரஸ்.. இத நம்ம ... தங்கபாலு அண்ணன் எப்ப ஒத்துக்குவார்னு தெரியல..
தேனி யாருக்கு..?: தினகரனுக்கா மச்சானுக்கா?
ஆமா... தேனி இவங்க குடும்ப சொத்து... மாமனுக்கும் மச்சானுக்கும் பிரித்து கொடுக்க.... சின்ன எம்.ஜி.ஆர்... இப்போ தான் கொஞ்சம் அடங்கியிருக்கார்... அதுக்குள்ள.. இது எல்லாம் தேவையா??
மார்ச் 9,2009
தேர்தல்..ஜாதகம் பார்த்து சீட் தரும் ஜெயலலிதா!
:-D
இதுக்கு என்னத்த எழுத...
இவங்க முதல் அமைச்சர் ஆனா... முதல தமிழ் நாட்டுக்கு ஒரு ஜாதகம் எழுதி... அவங்களுக்கும்.. அதுக்கும் பொருத்தம் பார்க்கணும்.. அப்புறம் தான் நாங்க...இவங்கள முதல் அமைச்சர்னு ஒத்துப்போம்...
மார்ச் 7,2009
கூட்டணியில் "சிண்டு'' முடிய ஜெயலலிதா முயற்சி : கருணாநிதி
சார்.. .உங்க கூட்டணியில.. இருக்கர ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணி தான் சார்.... இதுல சிண்டு முடிய யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.. தானா பண்ணிப்பாங்க...
ஜெயலலிதா உண்ணாவிரதம் காலம் கடந்த முயற்சி : ராமதாஸ்
ராமதாஸ் அண்ணே... இப்படி எல்லாம் காமெடி டயலாக் சொல்லிட்டு ... இன்னும் 2-3 நாள்ல.. அ.தி.மு.க கூட கூட்டணி அறிவிப்பீங்க.... அதையும்.. உங்க கட்சியினர்... ஏத்துக்கனும்...
ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு - ஏப். 1க்கு தள்ளி வைப்பு
இந்த செய்தி தான் இன்றைய இந்தியாவின் உண்மையான நிலையை வெளிப்படுத்துகிறது...
போன தேர்தல் பற்றி வழக்காம்.. இந்த தேர்தல் வரை ஆதாரம் இல்லாமல் இழுவையில்..
5 வருடங்கள் கிடைக்காத ஆதாரங்களை இன்னும் 20 நாட்களில் சேர்த்துவிடுவார்களா நம் காவலர்கள்/தேர்தல் ஆணையம்?? சந்தேகம் தான்...
குற்றவாளிகள் எந்த தடையுமின்றி போட்டியிடும் வரை .. நம் நாடு முன்னேற்றம் அடைவது கடினம்...
மார்ச் 6,2009
ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்திற்கு கலைஞர் கருணாநிதி வரவேற்பு
சபாஷ்... சரியான போட்டி... இந்த செய்தியில் அதிக நகைச்சுவையானது ...
க.க அல்லது.... ஜெ.ஜெ.. ??
Very close... very close.. its very hard to telll... :-D
கருணாநிதிக்கு ஓய்வு கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர் : ஜெயலலிதா
அம்மா உங்களுக்கும் வயசு 61.... நீங்களும் ஒய்வெடுக்க போகலாம்...
இலங்கை பிரச்சனைக்கு எல்லா கட்சிகளும் குரல் கொடுத்த பொழுது... ஒரு கவலையுமின்றி .... ஓய்வெடுக்க.. போன... நீங்க.. ஒய்வ பற்றி.. பேச தகுதியான ஆள் தான்...
நான் ஓய்வு பெறுவேன் என்று கனவு காண்பது நடக்கவே நடக்காது: கருணாநிதி
இந்த 'நீலி' மேய்ச்சலுக்கு வர முடியாது-கருணாநிதி
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை... அப்படினு.. .உங்க தொண்டர்கள் கத்தினா தான் உண்டு....
தமிழக மக்கள் முடிவு பண்ண வேண்டிய ஒன்றை எப்படி உங்களால்.. இவ்வளவு உறுதியாக சொல்லமுடிகிறது...?? தேர்தலில் கள்ள ஓட்டுகள் தயாரான மாதிரி தெரிகிறது..
மார்ச் 5,2009
வன்னியர் பொது சொத்து நலவாரியம் அரசு அறிவிப்பை வெளியிடக்கூடாது என்று தடுத்தது ஏன்? தேர்தல் அதிகாரிக்கு கருணாநிதி கேள்வி
இத்தனை வருடங்கள்... நீங்கள் செத்திருக்கலாம்.... ஆனால் செய்யவில்லை
ஆனால்.. "தேர்தல் வரும்பொழுது ஏதற்கு?" என்று யார் கேட்டாலும் .. அவர் உங்களுக்கு எதிரி தான்....
கருணாநிதியின் இந்த விளையாட்டை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
கருணாநிதி குற்றச்சாட்டு யாரையும் சந்தித்து எனக்கு பழக்கமில்லை;நரேஷ்குப்தா பேட்டி
பாவம் .. தேர்தல் அதிகாரி - கருணாநிதியின் சதி திட்டத்தில்..மாட்டிக்கொண்டார்...
மார்ச் 2,2009
கூட்டணி, தொகுதி பங்கீடு- திமுக, அதிமுக குழுக்கள் அறிவிப்பு
இது.. சன் டி.விக்கும்.... ஜெயா டி.விக்கும் நடக்கும் சிரிப்பு போர்...போல
முடியல..
அரசியல்வாதிக்கு... வெக்கம்,மானம்,சூடு,சுரணை இருக்கக்கூடாது என்பது சட்டமா என்ன...
இன்று காங்கிரஸ் உடன் , நாளை பா.ஜ.க வுடன் , அடுத்து தே.மு.தி.க வுடன்.... இவங்க யாராவது .. ஒரு நிமிடமாவது.. "நாம் மக்களை ஏமாற்றிவிட்டோமே" என்று நினைப்பார்களா?? தெரியாது....
கொள்கையை விட... பதிவியே பெரிதாக கருதும் அரசியல் காமெடியர்கள்/கட்சிகள் உள்ளவரை...
தமிழகத்தின் கதி.. கேள்விக்குறி தான்..
பிப் 27,2009
தலையை தானே கலைத்து விட்டு கொண்டு: கருணாநிதி
உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்ட அ.தி.மு.க : கருணாநிதி
முதல் அமைச்சராக தனது கடமையை செய்யாது.... வழக்கறிஞர் பிரச்சனையை சரி செய்யாது... வேடிக்கை பார்த்துவிட்டு.... அடுத்தவரை பார்த்து நக்கலடிக்கும் இவரை பற்றி என்ன சொல்வது....
பிப் 25,2009
ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்
ஜெயலலிதா 61 வது பிறந்த நாள் விழா: அ.தி.மு.க வினர் மும்மத வழிபாடு
இங்கு இலங்கை பிரச்சனை , வழக்கறிஞர்கள் பிரச்சனை என்று பல இருக்கும் போது... எதை பற்றியும்.. கண்டுக்கொள்ளாத அ.தி.மு.க வினரால்.. எப்படி "தமிழர்/பிற மனிதரை பற்றி கவலையில்லாத ஒருவருக்கு" பிறந்த நாள் கொண்டாட முடியும் என்று தெரியவில்லை...
இது ஒரு சின்ன....எடுத்துக்காட்டு தான்..
இவர்களை தவிர்த்து... இன்னும் பல காமெடியர்கள் பல கட்சிகளில் உள்ளனர்...
குறிப்பாக சொல்ல வேண்டுமானால்..
"வை.கோ" - சீட்டுக்காக கொள்கையை தொலைத்து தி.மு.க விடமும் அ.தி.மு.க விடமும் அசிங்கப்படும்... தமிழ் சிங்கம்... :-)
"விசயகாந்த்" - சினிமா படப்பிடிக்கு பாங்காக் சென்றாலும் கூட்டணி பற்றி மிகவும் கவலையில் இருக்கும் கருப்பு எம்.ஜி.ஆர் ... :-)
"திருமா" - எங்கே எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்களோ .. அவர்களை எல்லாம்.. அதே நிலையில்... தக்க வைத்து... ஓட்டு சேர்க்கும்... நேர்த்தியான...கருஞ்சிருத்தை.... யார் சீட்டு தருகிறார்களோ... அவர்கள் எல்லாம் இவருக்கு நண்பர்கள்... - கொள்கையற்ற அரசியல் இவருக்கு கைவந்த கலை....
"சரத்குமார்" - எண்ணினால்.... ஒரு 2000 பேர் ஆதரவளிக்கும் கட்சி வைத்துக்கொண்டு... தமிழ் நாட்டை பயமுறுத்தும்.... சுப்ரீம் ஸ்டார்...
"டி.ஆர்" - குறள் டி.வி மூலம் உலகளவில் தனது கட்சியை ஆரம்பித்து.... இந்திய அரசியலில் ...அல்ல.. உலக அரசியலில்.. பெரும் பூகம்பம் உண்டாக்கிய... இலட்சிய அரசியல் தலைவர்... ஓபாமாவின் ஆட்சியை அச்சுறுத்தும்... ஒரே நபர்...இவர் தான்..
சரி... எல்லாரையும் சொல்லும் நீ... ஆதரிக்கும்/ஒத்துக்கொள்ளும் தலைவர் யார் என்று நீங்கள் கேட்பது... கேட்கிறது...
நான் எவ்வளவு யோசித்தாலும்... எவ்வளவு தேடினாலும்.. ஒரு நல்ல தலைவரை / மனிதரை.. இன்றய அரசியலில் பார்க்க முடியவில்லை....
என்னை பொருத்தவரை....
ஒரு சிறந்த அரசியல்வாதி - "அப்துல் கலாம்" போல் இருக்க வேண்டும்... -
சொல்லும் செயலும் ஒன்றாய் கொண்டு, தனது கொள்கைகளுக்கு திறம்பட செயல் வடிவம் தரும் "கலாம்"போல்.. தலைவர்கள் தேவை...
அடுத்த 20 வருடங்களில் நாம் / நம் நாடு எங்கே போக வேண்டும் என்ற தொலைநோக்கு வேண்டும்...
ஜாதி மத பேதமின்றி மனிதரை மனிதராய் மதிக்கும் "கலாம்" வேண்டும்....
பதிவியை துச்சமாக கருதி ராஜினாமா செய்த.. "கலாம்" போல் இன்னொரு தலை வேண்டும்... தமிழகத்தை காத்திட..
செவ்வாய், 17 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக