சனி, 31 அக்டோபர், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

என் கனவின் நிஜம் நீ,
என் சிரிப்பின் ஓசை நீ,
என் தன்னம்பிக்கையின் வெற்றி நீ,
என் வாழ்வின் பொருள் நீ,

நீ புதிதாய் பிறந்த இன்று..
நானும் புதிதாய் பிறந்தேனடி..

--------------------------------

வருடா வருடம்...
முதல் முதல் மழைத்துளி போல்..
நீ பிறந்த நாள்!!

--------------------------------

வாழ கற்றுக்கொடுத்தாய்
நான் தேடிய இன்னொரு ..தாய் நீயடி!!

--------------------------------

வார்த்தைகள் மட்டுமே என்னிடம்
வாழ்க்கை மொத்தம் உன்னிடம்..
இன்று
என்னையும்.. உன்னுடன் சேர்த்துக்கொள்!


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஒரு விளம்பரம் தான்!!

டேனி மக்காஸ்கில்!!


வியாழன், 29 அக்டோபர், 2009

கோபம்



கண்கள் சிவந்திட,
நரம்பு புடைத்திட,
மெளனம் சிதரிட..
வார்த்தைகளின் மழை
கோபம்



கோபம் -
எண்ணம்,
கனவு,
சிந்தனை,
பழிவாங்கிட மட்டுமே!!

திங்கள், 26 அக்டோபர், 2009

உடல்!



அம்மா,
அப்பா,
தாதா,
பாட்டி,
அண்ணன்,
அக்கா,
தம்பி,
தங்கை,
உறவினன்,
நான்!

வெறும் உடல்,
சுவாசிக்க மறந்த பின்!

---------------



பழகிய நபர்களை,
தொட்டுத் தழுவிய தோல்களை,
வெரும் உடல்களாக்கும் நாட்கள்
மனித வாழ்வின், கசப்பு நாட்கள்!

கற்பனை!

Flightpattern from Gwen Vanhee on Vimeo.


ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

வாழ்க்கை

நினைவுகள்..

கனவுகள்..

நடுவே...

நிஜங்கள் - வாழ்க்கை!


செவ்வாய், 8 செப்டம்பர், 2009

கனவு முடியும் இடம்

வாழ்வெனும் கனவிலிருந்து எழுந்தவர்களில்...
நான்..
வாழ்வின் கனவு காண மறுத்தவர்களில்...
நான்..
வாழ்வில் கனவை தொலைத்த பலரில்..
நான்...

கனவு .. நான்....நிஜம்??