சனி, 31 அக்டோபர், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

என் கனவின் நிஜம் நீ,
என் சிரிப்பின் ஓசை நீ,
என் தன்னம்பிக்கையின் வெற்றி நீ,
என் வாழ்வின் பொருள் நீ,

நீ புதிதாய் பிறந்த இன்று..
நானும் புதிதாய் பிறந்தேனடி..

--------------------------------

வருடா வருடம்...
முதல் முதல் மழைத்துளி போல்..
நீ பிறந்த நாள்!!

--------------------------------

வாழ கற்றுக்கொடுத்தாய்
நான் தேடிய இன்னொரு ..தாய் நீயடி!!

--------------------------------

வார்த்தைகள் மட்டுமே என்னிடம்
வாழ்க்கை மொத்தம் உன்னிடம்..
இன்று
என்னையும்.. உன்னுடன் சேர்த்துக்கொள்!


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

1 கருத்து: