செவ்வாய், 28 ஜூலை, 2009

அரசியல்

கடமையை விலைபேசியது..
காசைக் கடவுளாக்கியது
கடவுளைப் பிரிவாக்கியது
பிரிவை ஓட்டுக்களாக்கியது..

காட்டைக் கட்டான் தரையாக்கியது..
விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கியது
வீட்டைக் "கட்சி" உடன்பிறப்புகளால் நிரப்பியது...
நாட்டைக் கவலைகிடமாக்கியது.

அரசியல்


நான் தமிழன்!

26 வருடங்கள்...
உண்ண உணவின்றி..
குடிக்க நீரின்றி..
தங்க இடமின்றி..
சொந்தங்கள் ஏதுமின்றி..

இன்று வரை..

பதுங்கு குழியே எங்கள் உறவினன்..
நடைப்போடும் கால்களே எங்கள் நன்பன்..
இன்று தப்பி பிழைப்பதுவே எங்கள் லட்சியம்..
நாளை சுவாசிப்பது மட்டுமே எங்கள் கனவு..

இன்றும்..என்னை சுற்றி..
எப்போதும்.. அரசியல் நாடகங்கள்.
எப்போதும்.. குற்றச்சாட்டுகள்..
எப்போதும்.. பழிச்சொற்கள்..
எப்போதும்.. ஏமாந்தவன் என்கின்ற பட்டம்..

இதை அனைத்தும் மீறி..

வாழ்ந்து காட்டுவேன்..
வென்று காட்டுவேன்..

நான் தமிழன்!!