திங்கள், 24 ஆகஸ்ட், 2009

மக்கள் - நாடு - நிஜம்!

மக்கள் நிஜமா?
அல்லது
நாடு நிஜமா?

மக்கள் இன்றி நாடு இல்லை...
நாடு இன்றி மக்கள் உண்டு...

எல்லா மனித இனமும் ஒன்று என்று கூறினால்..
நாடுகள் ஏன்??
நாடுகளின் பெயரால் போர்கள் எதற்கு?
மக்கள் உயிர் குடிக்கும் நாடு தேவை தானா?

வெரும் கொடுகள் என்று நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டாலும்..
எல்லைகளும் , பிரிவினையுமே எப்போதும் மனிதன் வாழ்வை தீர்மானிக்கின்றன..

இதை ஏற்று கொள்ள நாம் மருப்பது ஏன்?
ஏற்றத்தாழ்வு விரும்பாத மனிதர்களாய்.. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேன்?
நம் ஒவ்வொரு சிந்தனையிலும் ...
பிரிவினை ஒளிந்திருப்பது தான் நிஜம்!!

இதுவே மனிதனின் இயற்கை குணமா??

மனிதன் என்று சொல்லி
நாம் பிற உயிரினங்களிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
சாதி பெயர் சொல்லி..
நாம் பிற சாதியினரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
தமிழன் என்று..
நாம் பிற இனத்தவரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
தென்இந்தியன் என்று..
நாம் வட இந்தியரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
இந்தியன் என்று
நாம் பிற நாட்டவரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!

இப்படி..
ஒவ்வொரு படியிலும் பிரிவினை வளர்க்க ..
நாடுகளும்.. கொடுகளும் உதவுகின்றன..
இதுவே நிஜம்!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

புயல்

என்..புயல் வாழ்க்கையில்...
காற்றில்..மிதந்த ..பூ
அவள்..

புயலை மறந்தேன்...!!
பூவை பார்த்த நொடி!!




தெரு விளக்கு

வாழ்நாள் முழுதும்...
ஓர் இடம் நின்று...
வாழ வழிக்காட்டும்..
தெரு விளக்குகள்...
ஆசிரியர்கள்.